காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த 370, 35ஏ ஆகிய சிறப்பு அந்தஸ்தை சமீபத்தில் ரத்து செய்தது. இதற்கு எதிர்கட்சியினர் பல்வேறு அமைப்பினர் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர்.
இதற்கிடையே, மத்திய அரசு செய்திருப்பது மோசமான செயல் என்றும் காஷ்மீருக்கு மத்திய அரசு வஞ்சகம் செய்துள்ளது என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.
இந்நிலையில், ஸ்டாலின் கூறியதைக் கண்டித்து கோவை உக்கடம் மண்டல பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் ஸ்டாலின் காஷ்மீர் பிரிவினைவாதி, பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுபவர் என்றும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படும் இந்தியர் என்றும் முழக்கமிட்டனர்.
மு.க.ஸ்டாலினை எதிர்த்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் ஸ்டாலினை மட்டுமல்லாமல் வைகோ, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற 370,35ஏ சிறப்பு சட்டங்களை ரத்து செய்ததற்கு எதிராக செயல்படுவோர் அனைவரும் தேச நன்மைக்கு புறம்பாக செயல்படுவோர்கள் என்று அவர்கள் கூறினர்.