கோயம்புத்தூர் மாவட்டம் மலைபாளையம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான தென்னை நார் தயாரிப்பு கம்பெனியில் இன்று (அக்டோபர் 25) மாலை 5 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் அதிகமான அளவில் புகை வெளியேறியதால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
இது குறித்து அப்பகுதியினர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவலளித்தனர். தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுப்படுத்த கடும் முயற்சி மேற்கொண்டனர். இது தொடர்பாக சுல்தான் பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சுல்தான்பேட்டை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆயுத பூஜை கொண்டாடிய போது இருப்பு வைக்கப்பட்டிருந்த தென்னை நார்களில் தீ பற்றியதாகவும், இந்த விபத்தால் மூன்று கி.மீ., தூரம் வரை புகைமண்டலம் சூழ்ந்துள்ளதாகவும் அப்பகுதியினர் தெரிவித்தனர்.
தென்னை நார் கம்பெனியில் தீ விபத்து தற்போது, இரண்டு தீயணைப்பு வாகனம் மட்டுமே பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்தத் தீ விபத்தால் ஊழியர்கள் யாருக்கும் உயிர்சேதம் ஏற்படவில்லை என்றும் சம்பவ இடத்திற்கு அருகில் போடப்பட்டிருந்த தக்காளி தோட்டம் மட்டுமே பாழாகிவிட்டது எனவும் தகவல் கிடைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:விளையாட்டு உபகரணக் கடையில் திடீர் தீ விபத்து - பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதம்...!