கோவை பந்தயசாலை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் பார்த்திபன். இவருக்கும் இவரது உறவினர் பெண்ணான கணவரை பிரிந்து சிங்காநல்லூர் பகுதியில் வசித்துவரும் அபிநயா என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. கணவருடன் ஏற்ப்பட்ட பிரச்னை காரணமாக பார்த்திபன் 2017ஆம் ஆண்டு விசாரணை நடத்தியதில் இருந்து இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பெண் மீது தாக்குதல்: உதவி ஆய்வாளர் கைது
கோவை: பெண்ணை தாக்கிய சிறப்பு உதவி ஆய்வாளர் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
பார்த்திபன் அபிநயாவிற்கு தேவையான உதவிகளை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 15ஆம் தேதியன்று பார்த்திபன் அபிநயாவிடம் பணம் கேட்டு மிரட்டியதாகவும், தாக்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும் பணம் தர மறுத்ததால் இரு சக்கர வாகனத்தை தீ வைத்து எரித்துள்ளார்.
இது குறித்து அபிநயா அளித்த புகாரின் பேரில் சிறப்பு உதவி ஆய்வாளர் பார்த்திபனை கைது செய்த சிங்காநல்லூர் காவல் துறையினர் பார்த்திபன் மீது பெண்கள் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். அதுமட்டுமின்றி நாளை அவர் பணியிடை நீக்கம் செய்யப்படுவார் என்றும் தெரிகிறது.