தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

263 அணிகள் பங்கேற்ற கூடைப்பந்து போட்டி தொடக்கம்!

கோவை: 263 அணிகள் பங்கேற்ற சிபிஎஸ்சி பள்ளி மாணவர்களுக்கான 'க்ளஸ்டர் 6' கூடைப்பந்து போட்டி சுகுணா பள்ளியில் கோலாகலமாகத் தொடங்கியது.

basket ball

By

Published : Oct 10, 2019, 7:58 PM IST

கோவை காளப்பட்டியில் உள்ள நேரு நகரில் 2019-20ஆம் ஆண்டின் சிபிஎஸ்சி மாணவ மாணவிகளுக்கான 'கிளஸ்டர் 6' என்ற கூடைப்பந்து போட்டி சுகுணா பள்ளியில் கோலாகலமாகத் தொடங்கியது. வருகின்ற 14ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த ஆண்டுக்கான கூடைப்பந்து போட்டி முதன் முறையாக கோவையில் தொடங்கியுள்ளது.

இதில் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த 128 பள்ளிகளிலிருந்து 263 அணிகள் கொண்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். இப்போட்டியை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடக்கி வைத்தார்.

263 அணிகள் பங்கேற்ற கூடைப்பந்து போட்டி

இந்நிகழ்ச்சியில் சுகுணா கல்வி குழுமத்தின் தலைவர் லட்சுமி நாராயணசாமி, தாளாளர் சுகுணா உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார், முதல்முறையாக இதுபோன்ற போட்டி நடைபெறுவது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார். மேலும் போட்டியில் பங்கு பெறும் மாணவர்கள் வெற்றி பெற தனது வாழ்த்துகளையும் சுஜித் குமார் தெரிவித்துக் கொண்டார்.

இதையும் படிங்க: பரமக்குடியில் கல்லூரிகளுக்கு இடையிலான கைப்பந்து போட்டி!

ABOUT THE AUTHOR

...view details