சென்னையில் கரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ராயபுரம், தண்டையார் பேட்டை, திருவிக நகர் போன்ற இடங்களில் அதிதீவரமாக கரோனா தொற்று பரவி வருகிறது.
கரோனா பரவலைத் தடுக்க அலுவலர்கள், அமைச்சர்கள் தலைமையில் சிறப்புக் குழுவினர் வீதிகள்தோறும் சென்று பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் நோய்த் தொற்று கட்டுக்குள் வராமல் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது.
இந்நிலையில் நேற்று, இதுவரை இல்லாத அளவில் 1,390 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில், அதிகபட்சமாக ராயபுரம், தண்டயார்பேட்டை பகுதிகளில் 213 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள மண்டல வாரியான பட்டியலின்படி,
ராயபுரம் - 4405 பேர்
திரு.வி.க. நகர் - 2456 பேர்
வளசரவாக்கம் - 1170 பேர்
தண்டையார்பேட்டை - 3405 பேர்
தேனாம்பேட்டை - 3069 பேர்
அம்பத்தூர் - 901 பேர்
கோடம்பாக்கம் - 2805 பேர்
திருவொற்றியூர் - 972 பேர்
அடையாறு -1481 பேர்
அண்ணா நகர் - 2362 பேர்
மாதவரம் - 724 பேர்
மணலி - 383 பேர்
சோழிங்கநல்லூர் - 469 பேர்
பெருங்குடி - 481 பேர்
ஆலந்தூர் - 521 பேர்
என, மொத்தம் 15 மண்டலங்களில் 25,937 பேர் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 258 பேர் கரோனா தொற்றால் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க :கத்தாரில் இருந்து 146 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்!