சென்னை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் சுவாதி பிறழ் சாட்சியாக மாறியதால் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் விடுதலையாவார் என்ற நம்பிக்கையில் அவரது ஆதரவாளர்கள் சமூகவலைத்தளத்தில் தொடந்து கொண்டாடி வருகின்றனர்.
சேலம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் (பட்டியலினத்தை சேர்ந்தவர்). இவர் தன்னுடன் படித்த சுவாதி (வேறு சமூக பெண்) உடன் கடந்த 23.6.2015- அன்று திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் சந்தித்துள்ளார். அந்த சந்திப்புக்கு பிறகு தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் மற்றும் அவர்களது கூட்டாளிகளால் கோகுல்ராஜ் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு தண்டவாளத்தில் தற்கொலை போல் உடல் தனியாகவும் தலை தனியாகவும் தூக்கியெறியப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கோயிலில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து சேலம் யுவராஜ் உட்பட 15 பேரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றதில் ஆஜர்படுத்தினர். அப்பொழுது கோகுல்ராஜ் உடன் படித்த சுவாதி பிறழ் சாட்சியாக மாறினார் இருப்பினும் 100 திற்கும் மேற்பட்ட சாட்சிகளை வைத்து யுவராஜ் உட்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
இருப்பினும் 5 பேரை விடுதலை செய்தும் மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் 2022 மார்ச் 8-ல் தீர்ப்பளித்தது. அதை தொடர்ந்து யுவராஜ் உட்பட 10 பேரும் தண்டனையை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர்.
மேல்முறையீடு மனு மீதான விசாரணையை நீதிபதிகள் முக்கிய சாட்சியான சுவாதி இடம் சிசிடிவி காட்சிகளை காட்டி கேள்வி எழுப்பினர், அப்போது "வீடியோவில் இருக்கும் பெண் நான் இல்லை. அந்த ஆண் கோகுல்ராஜ் போல் தெரிகிறது. அதை உறுதியாக சொல்ல முடியாது" என பதிலளித்திருந்தார். இதனையடுத்து, தவறான தகவலை அளித்ததாக கூறி சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் முக்கிய சாட்சியானா சுவாதி பிறழ் சாட்சியாக மாறியதால், ’தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை’ நிறுவனர் யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் விடுதலை வாய்ப்புள்ளது என்ற நம்பிக்கையில் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளதில் புதிய புதிய பக்கங்கள் உருவாக்கி, நீதிமன்றத்தில் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வைத்து திரைப்பட பாடல்களை பின்னணியில் இணைத்து கொண்டாடி வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் கொண்டாடி வரும் யுவராஜ் ஆதரவாளர்கள் சில போஸ்டுகளில் (post) "நம் தலைவர் மிக விரைவில் இந்த வழக்கு தற்கொலை தான் என்று நம் தலைவர் கோயிலாக மதிக்கும் நீதிமன்றத்தில் நிரூபித்து மிக விரைவில் வெளியே வர இருக்கிறார் நம் தலைவருடன் சேர்ந்து கல பணி ஆற்ற நாம் அனைவரும் தயாராக இருக்க வேண்டும்" எனும் தலைப்புடனும் (caption), "கவுண்டர் இனத்தின் காவலரே" எனும் தலைப்புடனும் "விரைவில்" என்றும் பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் கொண்டாடி வரும் யுவராஜ் ஆதரவாளர்கள் இதையும் படிங்க:கோகுல்ராஜ் கொலை வழக்கு: சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை