சென்னை ஆதம்பாக்கம் நங்கநல்லூரிலுள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், புற்றுநோய் மருத்துவரும், ஏபிவிபியின் மாநிலத் தலைவருமான சுப்பையா சண்முகம் வசித்து வருகிறார். இதே குடியிருப்பில் வசித்து வரும் 62 வயது மதிக்கத்தக்கத பெண்ணுக்கும், இவருக்கும் கார் நிறுத்தும் இடத்தில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, அன்றிரவு அப்பெண்மணி வீட்டின் முன்பு சண்முகம் சுப்பையா சிறுநீர் கழித்துள்ளார். இதற்கான சிசிடிவி ஆதாரத்துடன் அப்பெண்ணின் உறவினர் பாலாஜி ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், இந்தப் புகாரின் மீது காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளது.
இந்தச் செய்தி ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து சண்முகம் சுப்பையா மீது காவல்துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், இருதரப்பும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்னையை சுமூகமாக முடித்துக் கொண்டதாகவும், புகாரை அந்தப் பெண்மணி திரும்பப் பெற்றுவிட்டதாகவும், ஏபிவிபி அமைப்பு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது.
இருந்தபோதிலும், ஏபிவிபி போன்ற இந்துத்துவா கும்பல்கள் தொடர்ச்சியாக பெண்கள் மீது இதுபோன்ற தாக்குதல்கல் நிகழ்த்திவருகின்றனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பலரும் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், அந்தப் பெண்ணை மிரட்டி புகாரை திரும்பப் பெற வைத்துள்ளனர் என்ற குற்றச்சாட்டும் பரவலாக எழுந்துள்ளது.
இதையும் படிங்க:என் சாவுக்கு சீமான்தான் காரணம்: விஜயலட்சுமி தற்கொலை முயற்சி