சென்னை:சென்னை அடுத்துள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள், பறவைகள், பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள ‘நகுலன்’ என்ற வெள்ளைப் புலி உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்தது. சரிவர உணவு சாப்பிடாமலும், உடல் நிலையில் முன்னேற்றம் இல்லாமல் இருந்துள்ளது. இதையடுத்து, மருத்துவ சிகிச்சைக்காக வெள்ளைப் புலி கூண்டில் அடைக்கப்பட்டது.
பராமரிப்பாளர் செல்லையா மற்றும் ஊழியர்கள் பூங்கா மருத்துவர்கள் முன்னிலையில், புலியின் மாதிரிகளை சேகரிக்கும் பணியில் இன்று (மே 3) ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென வெள்ளைப் புலி பாய்ந்து பராமரிப்பாளர் செல்லையாவை தாக்கியது. இதில் புலியின் நகங்கள் பட்டதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று செல்லையா வீடு திரும்பினார்.