தமிழ்நாடு

tamil nadu

கோதுமை கொள்முதல்: கடந்தாண்டை விட 35 விழுக்காடு அதிகரிப்பு!

சென்னை: நடப்பு ராபி சந்தைப் பருவத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கோதுமை கொள்முதல் அளவு, கடந்தாண்டை விட 35 விழுக்காடு அதிகரித்துள்ளது.

By

Published : May 13, 2021, 6:30 PM IST

Published : May 13, 2021, 6:30 PM IST

கடந்தாண்டை விட 35 விழுக்காடு அதிகரிப்பு
கடந்தாண்டை விட 35 விழுக்காடு அதிகரிப்பு

நாடு முழுவதும் கடந்த மே 10ஆம் தேதி வரை 341.77 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்தாண்டு இதே காலத்தில் 252.51 லட்சம் மெட்ரிக் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது.

ராபி கொள்முதல் மூலம் சுமார் 34.57 லட்சம் விவசாயிகள், குறைந்தபட்ச ஆதரவு விலையாக 67,499.98 கோடி ரூபாய் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரிப், ராபி பயிர் இணைந்து 732.74 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. சுமார் 109.75 லட்சம் விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவு விலையாக 1,38,341.11 கோடி ரூபாயை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பருப்பு, எண்ணெய் வித்துக்கள் கொள்முதல் செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கடந்த மே 10ஆம் தேதி வரை 6,51,493.99 மெட்ரிக் டன் பாசி பருப்பு, உளுந்தம் பருப்பு, மைசூர் பருப்பு, நிலக்கடலை, கடுகு, சோயாபீன்ஸ் ஆகியவை 3,414.20 கோடி ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, கர்நாடக விவசாயிகள் மூன்றாயிரத்து 961 பேரிடமிருந்து கடந்த மே 10ஆம் தேதி வரை, ஐந்தாயிரத்து 89 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் 52.40 கோடி ரூபாய் மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details