சென்னை:குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் உருவாகியுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாகத் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் நேற்று முதல் அதிக கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களின் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
தென்மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு; நிவாரண பொருட்கள் பெருவதற்கான வாட்ஸ்அப் தொடர்பு எண் அறிவிப்பு!
Southern Districts Relief products: திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் அதிக கனமழை பெய்து வருவதைத் தொடர்ந்து அங்கு பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான நிவாரண பொருட்கள் வழங்குவதற்கான தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
Published : Dec 18, 2023, 5:28 PM IST
இந்நிலையில் தென்மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கான நிவாரண பொருட்கள் வழங்குவதற்கான தொடர்பு எண்களைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதில், “கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான நிவாரண பொருட்களை (ரொட்டி பாக்கெட்டுகள், தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கெட் பாக்கெட்டுகள், பால் பவுடர், உலர் பழங்கள், மளிகை பொருட்கள், பாய்கள், போர்வைகள், துண்டுகள், மெழுகுவர்த்திகள், தீப்பெட்டிகள், லுங்கிகள், நைட்டிகள், நேப்கின் பேடுகள் உள்ளிட்டவை) வழங்க விரும்பும் தன்னார்வலர்கள் மற்றும் நிறுவனங்கள் வாட்ஸ்அப் அலைபேசி எண் 7397766651 தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” என தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:மஞ்சளாறு அணையில் இருந்து நீர் திறப்பு.. தேனி - திண்டுக்கல் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!