தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கச்சாலீஸ்வரர் ஆலய சொத்துப் பாதுகாப்பு நடவடிக்கை என்ன? - இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க உத்தரவு

சென்னை: பாரிமுனையில் உள்ள கச்சாலீஸ்வரர் ஆலயத்திற்கு சொந்தமான சொத்துகளை பாதுகாக்க இந்து சமய அறநிலையத்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

By

Published : Jun 12, 2020, 5:21 PM IST

court
court

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், 'சென்னை பாரிஸில் பிரசித்தி பெற்ற அருள்மிகு கச்சாலீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு சொந்தமான தெப்பக்குளத்தில் நடத்தப்படும் திருவிழாவில் அருள்மிகு காச்சாலீஸ்வரர், அருள்மிகு காளியம்மன், அருள்மிகு முத்துகுமாரசுவாமி, அருள்மிகு சிவ சண்முக விநாயகர், அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலய தெய்வங்கள் 5 நாள் பங்கேற்கின்றன.

ஆலயத்தை சரியாக பராமரிக்காததால், குளத்தின் தண்ணீர் வரத்து தடைபட்டு கடந்த 9 ஆண்டுகளாக தெப்பத்திருவிழா நடத்தப்படாமல் உள்ளது. மேலும், குளத்தை சுற்றியுள்ள சுவர்கள் சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால், அருகில் வசிக்கும் பொதுமக்களின் உயிருக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு ஆளுநர், இந்து சமய அறநிலையத்துறைக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், ஆலயத்தை பராமரிக்கவும், கோயிலுக்கு சொந்தமான சொத்துகளை கண்டறியவும் ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் அடங்கிய அமர்வு முன் இன்று (ஜுன் 12) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கச்சாலீஸ்வரர் ஆலயத்திற்கு சொந்தமான சொத்துகளை பாதுகாக்க இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை 4 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க:வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க திட்டம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details