தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா தொற்று உறுதி : சீல் வைக்கப்பட்டுள்ள மேற்கு தாம்பரம் பகுதி!

சென்னை : கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவல் காரணமாக மேற்கு தாம்பரம் கே.ஆர்.எஸ் நகர் பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

Breaking News

By

Published : Apr 9, 2020, 7:51 AM IST

உலகளாவிய அச்சுறுத்தலாக மாறி இருக்கும் கரோனா வைரஸ் பெருந்தொற்று தமிழ்நாட்டில் தீவிரமடைந்து வருகிறது. தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

இருப்பினும், அதன் தாக்கம் தமிழ்நாட்டில் இரண்டாம் கட்டத்தை அடைந்திருக்கிறது. இதுவரை தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்றால் 721 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு முழுவதுமுள்ள மாவட்ட நிர்வாகங்கள் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், தொற்று நோய் அறிகுறி தென்பட்டவர்கள், அவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் உள்ளிட்டவர்களை தனிமைப்படுத்தி மருத்துவக் கண்காணிப்பில் வைத்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக, மேற்கு தாம்பரம் கே.ஆர்.எஸ் நகரில் கரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்ட ஒருவருக்கு அதன் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து அப்பகுதி முழுவதும் நகராட்சி அலுவலகத்தால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு சீல் வைக்கபட்டுள்ளது. மேலும் அப்பகுதி முழுவதும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு 28 நாள்களுக்கு வெளியார் உள்ளே செல்லவும், உள்ளே இருப்பவர்கள் வெளியே வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த பகுதியில் உள்ள 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தனிமைப்படுத்தபட்டு தீவிர கண்காணிப்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருள்கள் காய்கறிகள் ஆகியவற்றை வாகனங்களில் வினியோகம் செய்ய நகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.

அதேபோல் தாம்பரம் காவல் துறையினர் அப்பகுதி முழுவதும் ஆளில்லா விமானங்களில் (ட்ரோன்) ஒலிபெருக்கி வைத்து மக்களுக்கு அறிவிப்பு செய்து வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனை புனித தோமையார் மலை காவல் துறை இணை ஆணையர் பிரபாகர், தாம்பரம் நகராட்சி அலுவர்களுடன் ஆய்வு செய்தார்.

இதையும் படிங்க :ஒரு டம்ளர் பாலுக்காக மகனை சுட்டுக் கொன்ற தந்தை - மூன்று பேர் உயிரிழந்த பரிதாபம்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details