தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 கோடியே 81 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் ஜெயக்குமார்!

சென்னை: தமிழ்நாடு அரசின் சிறப்பு குறைதீர் கூட்டத்தின் கீழ் 1,548 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 81 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார்.

admk minister jeyakumar

By

Published : Nov 16, 2019, 1:43 PM IST

சிறப்பு குறைதீர் கூட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர், 1,548 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 81 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சென்னையில் முதல்கட்டமாக இன்று நடைபெற்ற இவ்விழாவில், திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, பெரம்பூர், புரசைவாக்கம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் ஜெயக்குமார்

சாதிச்சான்றிதழ், ஆதரவற்ற விதவைச் சான்றிதழ், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் உதவித்தொகை, குடும்ப அட்டை அளித்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் இந்நிகழ்வில் நிறைவேற்றப்பட்டன.

இதையும் படிங்க: திமுக கோடீஸ்வர கட்சி, அதிமுக ஏழைகளுக்கான இயக்கம்' - அமைச்சர் ஜெயக்குமார்

ABOUT THE AUTHOR

...view details