கரோனா பரவலைத் தடுக்க, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. மேலும் அத்தியாவசியத் தேவைகள் தவிர, பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை விதித்தும் உள்ளனர்.
ஆனால், இந்தத் தடை உத்தரவை மீறி, பலர் வெளியே சுற்றி வருவதால், இவர்களைத் தடுக்கும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, காவல் துறையினருடன் இணைந்து ஆயுதப்படைக் காவலர்களும் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவலர்களின் உழைப்பை உணர்த்தும் வீடியோ மேலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் காவல் துறையினர் சிலருக்கு கரோனா தொற்று பரவி உள்ளதால், அனைத்துக் காவலர்களுக்கும் கரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது. இந்த நிலையில், ஆயுதப்படை காவலர்களுக்கு கரோனா தொற்று பரவாமல் தடுக்க 300 ஆயுதப்படை காவலர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கு கபசுர குடிநீரை ஆயுதப்படை துணை ஆணையர் சவுந்தர் ராஜன் இன்று சென்னை - புதுப்பேட்டையில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் வைத்து வழங்கினார்.
காவலர்களுக்கு கபசுர குடிநீர் மேலும் ஆயுதப்படை காவலர்கள் சார்பாக நடமாடும் மலிவு விலை காய்கறிக் கடையின் விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையிலும், ஆயுதப்படைக் காவலர்கள் இணைந்து முகக்கவசம், சானிடைசர் ஆகியவை தயாரிப்பது குறித்த குறும்படத்தை தயாரித்து, நடித்து வெளியிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: காட்டு காளான்களை சாப்பிட்டு இருவர் உயிரிழப்பு!