சென்னை:சேலம் மாவட்டம், பூசாரிவளவு கிராமத்தைச் சேர்ந்த கே.சகுந்தலா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், "நான் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது, டிசம்பர் 16ஆம் தேதி 2020ஆம் ஆண்டு எடப்பாடி அருகே உள்ள ராயனம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டேன். சுகப் பிரசவம் என்ற நிலை இருந்தும், தொலைப்பேசி மூலம் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற செவிலியர், தனக்கு அறுவை சிகிச்சையை மேற்கொண்டார்.
மேலும், உரிய அனுபவம் எதுவும் இல்லாமல் நான்காம் தர சிகிச்சை, பெருங்குடல் வாய், சுருக்குதசை ஆகிய பகுதிகளில் ஆழமாக வெட்டப்பட்டது போன்ற காரணங்களால் அதிக அளவு ரத்தப்போக்கு ஏற்பட்டு, மிகவும் பலவீனமடைந்துள்ளேன். இதனால், சம்மந்தப்பட்ட ஆரம்ப சுகாதார மையத்தின் மருத்துவர், செவிலியர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.