தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கு: வடசென்னையில் 86 இடங்களில் வாகன சோதனை!

கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடைபிடிக்கப்படும் 31 மணி நேர ஊரடங்கை முன்னிட்டு வடசென்னையில் 86 இடங்களில் வாகன சோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஊரடங்கு: வடசென்னையில் 86 இடங்களில் வாகன சோதனை!
ஊரடங்கு: வடசென்னையில் 86 இடங்களில் வாகன சோதனை!

By

Published : Jan 9, 2022, 8:38 AM IST

தமிழ்நாட்டில் ஒமைக்ரான் கரோனா பரவலை தடுக்கும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி இரவு, ஞாயிறு என தொடர்ந்து 31 மணி நேரம் தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று (ஜன.8) வடசென்னை சரகத்திற்குள்பட்ட பகுதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

இதில் வண்ணாரப்பேட்டை சரகத்தில் 15 இடங்கள், பூக்கடை சரகத்தில் 12 இடங்கள், புளியந்தோப்பு சரகத்தில் 15 இடங்கள், பூக்கடை சரகத்தில் பிரச்னைக்கு உண்டான இடம் என கண்டறியப்பட்ட 24 இடங்கள் என மொத்தம் 86 இடங்களில் வாகன சோதனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஏற்கனவே உள்ள காவலர்கள் மட்டுமின்றி மேலும் சுமார் 750 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கரோனா பரவலை தடுக்கும் விதமாக தினமும் ஆயிரத்துக்கும் அதிகமான முகக்கவசம் அணியாதவர்கள் மீது வடசென்னை சரகத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நிறம் சேர்க்கப்பட்ட குடல் அப்பளம், வடகம், வத்தல் தரத்தை உறுதிசெய்ய அரசு நடவடிக்கை

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details