தமிழ்நாடு

tamil nadu

தமிழ்நாடு அரசுக்கு வைகோ எச்சரிக்கை!

சென்னை: திருமுருகன் காந்தி மீது போடப்பட்ட பொய் வழக்குகளை தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும், இல்லையென்றால் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என வைகோ எச்சரித்துள்ளார்.

By

Published : Aug 13, 2019, 4:10 AM IST

Published : Aug 13, 2019, 4:10 AM IST

thirukural conference

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் திருக்குறள் மாநாடு, சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மே17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது போடப்பட்டுள்ள 38 பொய் வழக்குகளை ரத்து செய்யுமாறு அரசை எச்சரித்தார்.

மேலும் பேசுகையில் "இந்த இனத்தை மீட்கும் படையில் முன்னணியில் திருமுருகன் காந்தி இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். அவருக்கு ஆங்கிலப்புலமை இருக்கிறது. அது ஈழ தமிழருக்காக அவர் ஜெனிவாவில் குரல் கொடுக்க தேவைப்படுகிறது. உலக நாடுகளிடையே பிரபாகரனின் லட்சியத்திற்கு ஆதரவு திரட்ட திருமுருகன் காந்தி தேவைப்படுகிறார்.

திருக்குறள் மாநாட்டில் வைகோ

அவரைப் போன்ற இளைஞர் தமிழருக்காகவும் ஈழத்தமிழருக்காகவும் போராட வேண்டிய கட்டாயமிருக்கிறது. எனவே அவர்மீது புனையப்பட்டுள்ள 38 பொய் வழக்குகளை முதலமைச்சர் ரத்து செய்யவேண்டும். இல்லையென்றால் விளைவுகள் விபரீதமாக இருக்கும்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details