தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 18, 2019, 9:31 AM IST

ETV Bharat / state

தமிழர்களை வஞ்சிக்கும் இந்திய அரசாங்கம்; வைகோ, திருமுருகன் காந்தி பேட்டி

சென்னை: ஈழத்தமிழர்களுக்கான 10ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் வைகோவும், திருமுருகன் காந்தியும் பேட்டியளித்துள்ளனர்.

vaiko and thirumurugan

மதிமுக சார்பில் அக்கட்சி தலைமை அலுவலகத்தில் ஈழ தமிழர்களுக்கு 10ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைப்பெற்றது. இதில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியும் கலந்துகொண்டார். மேலும் மதிமுக முக்கிய நிர்வாகிகள், துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.நினைவேந்தல் நிகழ்ச்சியில் போரில் மறைந்த ஈழ தமிழர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மெழுகுவர்த்தி தீபம் ஏற்றியும், மலர் தூவியும் போற்றினர்.

வைகோ, திருமுருகன் காந்தி பேட்டி

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, ”தமிழின மக்களுக்கான நீதி இன்றுவரை தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருகிறது. இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையை தற்போதுவரை நடைமுறைப்படுத்தவில்லை. தமிழின மக்களுக்கு அரசியல் கோரிக்கையை நடைமுறைப்படுத்துகின்ற வகையில் பொது வாக்கெடுப்பும் இன்றுவரை நடத்தப்படவில்லை. இந்த சூழ்நிலையில் இலங்கை அரசை பாதுகாக்கும் வகையில் சர்வதேச நாடுகள் பல ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்திவருகின்றன. இந்திய அரசு உதவியில் சர்வதேச விசாரணை என்னும் பிடிப்பில் இருந்து தப்பிவிட முடிகிற அரசை பாதுகாக்கின்ற வகையில் ஒரு வெளியுறவு கொள்கையை இந்திய அரசு வைத்திருக்கும்வரை தமிழ் மக்களுக்கு நீதி எனும் ஒன்று கிடைக்காது என கூறினார்.

இதன் தொடர்ச்சியாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில், ”இலங்கையில் நடைப்பெற்றது போர் குற்றம் அல்ல அது ஒரு இனப்படுகொலை ஆகும். இந்திய மோடி அரசு ஐந்தாண்டில் சிங்கள அரசுக்கு தொடர்ச்சியாக உதவிவருகிறது. தமிழர்களுக்கும், மீனவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை, ஈழ தமிழர்களுக்கும் நீதி கிடைக்கவில்லை. பொது வாக்கு எடுப்பதுதான் ஒரு நிரந்தர தீர்வு ஆகும், இதில் எந்த மாற்றமும் இல்லை. இந்திய அரசு வேண்டுமென்றே விடுதலைப் புலிகள் மேல் ஐந்தாண்டுகள் தடையை நீட்டித்துள்ளது. முன்னர் நான் தடையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனு இன்னும் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கு விசாரணைக்கு வந்தால் நான் மீண்டும் வாதாடுவேன் என கூறினார்

ABOUT THE AUTHOR

...view details