சென்னை எழும்பூரில் உள்ள மகப்பேறு, தாய்சேய் நல மருத்துவமனையில் பாலூட்டும் தாய்மார்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணியை இன்று (ஜூன். 16) முதல் மருத்துவமனையின் இயக்குநர் விஜயா தொடங்கி வைத்தார்.
பின்னர், செய்தியார்களிடம் பேசிய அவர், ’’கரோனா பரவல் மூன்றாவது அலை வரும் என கூறப்படுகிறது. அதனைக் கருத்தில் கொண்டு குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு, குழந்தை பிறந்த மூன்றாவது நாள் முதல் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம்
சென்னை: எழுப்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் பாலூட்டும் தாய்மார்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் (ஜூன். 16) பணி தொடங்கியுள்ளதாக மருத்துவமனை இயக்குநர் விஜயா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், சென்னை எழும்பூரில் உள்ள மகப்பேறு, தாய்சேய் நல மருத்துவமனையில் குழந்தை பெற்ற பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசிகள் போடப்படுகின்றன. ஒன்பது தாய்மார்களுக்கு, இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மருத்துவத் துறை வல்லுநர்கள் கலந்து ஆலோசித்து கர்ப்பிணிப் பெண்களுக்கும் தடுப்பூசிச் செலுத்தி கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். ஒன்றிய அரசு அனுமதி வழங்கியதுடன் கர்ப்பிணி பெண்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி விரைவில் தொடங்கும்.
இந்த ஆய்வில், சுமார் 700 கர்ப்பிணிகள், குழந்தைகளின் ரத்தம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், தாயிடமிருந்து எந்த குழந்தைக்கும் கரோனாத் தொற்று பரவவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. கட்டாயமாக பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்’’ என வேண்டுகோள் விடுத்தார்.
இதையும் படிங்க: லோனி சம்பவம்: ட்விட்டர் மீது உ.பி. காவல் துறை வழக்குப்பதிவு