தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'காலைப் பிடிப்பதுதான் கோட்டைக்கான வழி...!' - எடப்பாடி மீது விமர்சன கணைகள் தொடுக்கும் உதயநிதி

சென்னை: தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவை சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிசாமியை திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சரமாரியாக விமர்சனம் செய்துள்ளார்.

முதலமைச்சரை சரமாரியாக தாக்கிய உதயநிதி ஸ்டாலின்!
முதலமைச்சரை சரமாரியாக தாக்கிய உதயநிதி ஸ்டாலின்!

By

Published : Jun 9, 2020, 7:52 AM IST

கரோனா வைரஸ் (தீநுண்மி) காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக நாட்டில் உள்ள பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கரோனா அச்சம் காரணமாக நடத்தப்படாமல் இருக்கிறது.

தமிழ்நாட்டில் ஜூன் 15ஆம் தேதிமுதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சியினர் பலர் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சருக்கு மக்களின் வலி, வேதனையை உணரமுடியும்.

அதற்குச் சான்று தெலங்கானா முதலமைச்சர். ஆனால் காலைப் பிடிப்பதுதான் கோட்டைக்கான வழி என கூவத்தூர் வழியாக புது ரூட் பிடித்தவர்களுக்கெல்லாம் அவற்றை உணரமுடியாது” என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

முதலமைச்சரை சரமாரியாகத் தாக்கிய உதயநிதி ஸ்டாலின்!

மூவாயிரத்து 600-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்ட தெலங்கானாவில் தேர்வின்றி, 10ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளது நோக்கத்தக்கது.

இதையும் படிங்க...பொதுத்தேர்வு நடத்துவது சரியா? மாநில அரசிற்கு ஸ்டாலின் கேள்வி

ABOUT THE AUTHOR

...view details