தமிழ்நாடு முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் மே 7 ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். முதலமைச்சராக பதவியேற்றதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 4 ஆயிரம் நிதி உதவி அளிக்கும் திட்டம் உள்பட 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.
மேலும், முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் தனி செயலாளர்களாக உதயசந்திரன், உமாநாத், எம்.எஸ் சண்முகம், அனு ஜார்ஜ் ஆகிய 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், உதயச்சந்திரனுக்கு கூடுதல் பொறுப்பாக சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உதயச்சந்திரனுக்கு கூடுதல் பொறுப்பு ஒதுக்கீடு அதில், தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் புதிய திட்டங்கள், நடைமுறையில் உள்ள மக்கள் நலத் திட்டங்கள் ஆகியவற்றைக் கண்காணிப்பது, அவற்றை சீரிய முறையில் அமல்படுத்துவது ஆகிய பணிகளை உதயச்சந்திரன் மேற்கொள்வார் எனக் கூறப்பட்டுள்ளது.