தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த இருவர் துப்பாக்கி முனையில் கைது

சென்னை வேளச்சேரி மற்றும் மடிப்பாக்கம் பகுதிகளில் கடைகள் மற்றும் வீடுகளின் பூட்டை உடைத்து தொடர்ந்து கொள்ளையடித்து வந்த இருவரை காவல் துறையினர் துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளனர்.

சென்னையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த இருவர் துப்பாக்கி முனையில் கைது
சென்னையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த இருவர் துப்பாக்கி முனையில் கைது

By

Published : Oct 10, 2022, 12:24 PM IST

சென்னை:வேளச்சேரி மற்றும் மடிப்பாக்கம் உள்ளிட்டப் பல்வேறு பகுதிகளில் வீடுகள் மற்றும் கடைகளை குறிவைத்து இரவு நேரங்களில் கொள்ளையடிப்பது தொடர்பாக, வேளச்சேரி காவல் நிலையத்திற்கு புகார்கள் தொடர்ந்து வந்துள்ளன. இந்தப்புகாரின் அடிப்படையில் அங்குள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றிய காவல் துறையினர், கொள்ளையர்களை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்த நிலையில் அம்பேத்கர் நகரைச்சேர்ந்த சூர்யா என்ற குருவி சூர்யா (21) மற்றும் வினோத் குமார் என்ற எலி வினோத் (20) ஆகிய இருவரை தனிப்படை காவல் துறையினர் துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளனர். பின்னர் இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பல்வேறு இடங்களில் கொள்ளையடித்துவிட்டு, தலைமறைவாக இருந்து வந்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து கைதான இருவரிடம் இருந்து நான்கு சவரன் தங்க நகைகள் மற்றும் ஏராளமான செல்போன்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:குழந்தையின் கழுத்தில் இருந்த நகையைத்திருடிய பெண் கைது!

ABOUT THE AUTHOR

...view details