சென்னை: கண்ணகி நகர் அடுக்குமாடி குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் சுமதி (40). இவர் வீட்டு வேலை செய்து வருகிறார். கடந்த 9ஆம் தேதி சுமதி வீட்டு வேலை முடித்து கொட்டிவாக்கம் சாமிநாதன் நகர் வேதகிரி தெருவில் நடந்து செல்லும்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 அடையாளம் தெரியாத நபர்கள் சுமதியின் செல்ஃபோனை பறித்துச் சென்றனர்.
இது குறித்து சுமதி நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து இருசக்கர வாகனத்தின் பதிவு எண்களை வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்டது சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த அருண் (22), ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (26) எனத் தெறியவந்தது. பின்னர் இருவரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து ஒரு செல்ஃபோன், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும், இவர்கள் இருவர் மீதும் நீலாங்கரை காவல் நிலையத்தில் இருசக்கர வாகனம் திருடிய வழக்கு, தாழம்பூர் காவல்நிலையத்தில் வழிப்பறி வழக்கு நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:பள்ளி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை - திருச்செங்கோட்டில் பரபரப்பு