திமுகவின் இளைஞரணிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலினை ட்விட்டர்வாசிகள் விமர்சித்து வருகின்றனர்.
ஏறத்தாழ 30 வருடங்கள் ஸ்டாலின் வசமிருந்த திமுக இளைஞரணிச் செயலாளர் பதவி உதயநிதி ஸ்டாலினுக்கு கிட்டியுள்ளது.
திமுகவின் மிக முக்கியப் பொறுப்பாகக் கருதப்படும் இந்த பதியை மகன் உதயநிதிக்குக் கொடுத்தற்கு அக்கட்சித் தலைவர் ஸ்டாலினைக் கழகத்தினர் பாராட்டிவருகின்றனர்.
இந்நிலையில், எந்த ஒரு அரசியல் அனுபவமும் இல்லாத உதயநிதிக்கு இப்படி திடீர் என்ட்ரீ கொடுத்திருப்பது தங்களுக்கு அதிருப்தி அளிப்பதாகவும், இதன்மூலம் திமுகவின் குடும்ப அரசியல் நிலைநிறுத்தப்பட்டிருப்பதாகவும் சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் விமர்சித்துவருகின்றனர்.
ட்விட்டரில், #உதயநிதிக்கு_மண்டியிட்ட_திமுக என்ற ஹேஷ்டாக் நேற்று முழுவதும் ட்ரெண்டிங்களில் இருந்தது.
ட்விட்டர்வாசிகள் உதயநிதியை விமர்சித்து போட்ட ட்வீட்கள்:
வடிவேலுவின் காமெடியை வைத்து உதயநிதி ஸ்டாலினை விமர்சிக்கும் ட்வீட் திமுகவை சித்த வைத்தியசாலை என விமர்சிக்கும் ட்வீட் பாகுபலி பட கட்டப்பா கதாபாத்திரத்தை வைத்து உதயநிதியை கிண்டல் செய்த ட்வீட் திமுக வாரிசு அரசியல் செய்வதாக விமர்சிக்கும் ட்வீட்