சென்னை:இது குறித்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,“மேற்கு வங்காள மாநிலம், ஹூக்ளி மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது குழந்தை பிரிதம் தாஸ். அவர் மூக்கில் பருவ வயது ஆண் சிரார்களுக்கு வரக்கூடிய ரத்தநாள சதைநார் கட்டியால் (JNA) பாதிக்கப்பட்டு இருந்தார். அது நான்காவது கட்டம் (Stnge-lV), அதாவது கண்ணுக்கும், மூளையின் வெளியுரைக்கும் வெகு அருகில் பரவியுள்ளது என்பதை எய்ம்ஸ் கல்யாணி மருத்துவமனையில் கண்டறிந்தனர். அதற்கு சிகிச்சை முறை அங்கு இல்லாத காரணத்தினால் தமிழ்நாட்டில் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், பாண்டிச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கும் சென்றுள்ளனர். அங்கேயும் சீரிய சிகிச்சை கிடைக்கப் பெறாததால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர்.
இங்கு அவரை கடந்த ஜூன் 8ம் தேதி காது மூக்கு, தொண்டை துறை பேராசிரியர் மரு.என்.சுரேஷ்குமார் தலைமையிலான மருத்துவக்குழு பரிசோதனை செய்த பின்னர், உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு அனைத்து முதற்கட்ட பரிசோதனைகளும் விரைவாக மேற்கொள்ளப்பட்டன.