அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பிரபு, இரத்தினசாபாபதி, கலைச்செல்வன் ஆகியேர் செயல்பட்டு வந்தனர். இந்த நிலையில் அரசு கொறடா ராஜேந்திரன் மூன்று எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தார்.
சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறும் 3 எம்எல்ஏக்கள்?
15:38 July 26
சென்னை: தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் மூன்று பேரும் சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸ் தொடர்பான வழக்கை 30ஆம் தேதி திரும்ப பெறவுள்ளனர்.
இதன் அடிப்படையில் மூவருக்கும் சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார். இது தொடர்பாக தங்கள் மீது நடவடிக்கையும் எடுக்க கூடாது என்பதற்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில் சபாநாயகர் நோட்டீஸ் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிறபித்தது. அதோடு வழக்கு விசாரணையும் ஜூலை 30ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
இதனிடையே மக்களவை பொதுத்தேர்தல் மற்றம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அமமுக பெரும் பின்னடைவை சந்தித்தது. இதனால் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து வந்த மூன்று எம்எல்ஏக்களும் முதலமைச்சரை சந்தித்து தங்களது ஆதரை தெரிவித்தனர். இந்த சூழலில் வழக்கு விசாரணையும் ஜூலை 30ஆம் தேதி வரவுள்ளதால் வழக்கை மூவரும் திரும்ப பெறவுள்ளனர்.
இதன் பின்பு பிரபு, இரத்தினசாபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் மீதான நடவடிக்கையை சபாநாயகர் கைவிட அதிமுக தலைமை சார்பாக அரசு கொறடா ராஜேந்திரன் வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது.