தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'போக்குவரத்து தாெழிலாளர்களையும் முன்களப்பணியாளராக அறிவிக்க வேண்டும்' - ஓபிஎஸ்

மக்களை இணைப்பதில், நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதிலும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும் இன்றியமையாததாக விளங்குவது, போக்குவரத்து. தங்களது உயிரைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் பொதுமக்களுக்கு சேவை புரிய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு பணியாற்றும் அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களையும்; முன்களப் பணியாளர்களாக முதலமைச்சர் அறிவிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

By

Published : May 27, 2021, 7:32 PM IST

சென்னை: போக்குவரத்துத் தொழிலாளர்களையும் முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

இன்றியமையாததாக விளங்குவது போக்குவரத்து

இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "மக்களை இணைப்பதில், நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதிலும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும் இன்றியமையாததாக விளங்குவது போக்குவரத்து. அந்தப் போக்குவரத்துச் சேவையினை அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர். கரோனா நோயின் தாக்கம் கொடூரமாக இருக்கும் இந்தக் காலகட்டத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டாலும், மருத்துவப் பணியாளர்களுக்காகவும், சுகாதாரப் பணியாளர்களுக்காகவும், அத்தியாவசியத் துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்காகவும், பேருந்துகளை இயக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்றியமையாததாக விளங்குவது போக்குவரத்து

உயிரைப் பற்றி சற்றும் கவலைப்படாமல்...

அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வரும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் பணி பாராட்டுக்கும், போற்றுதலுக்கும் உரியது. தங்களது உயிரைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் பொதுமக்களுக்கு சேவை புரிய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு பணியாற்றும் அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் பலர் கரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 500க்கும் மேற்பட்ட போக்குவரத்துத் தொழிலாளர்கள் கரோனா நோய்த் தொற்றினால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிகிறது.

உயிரைப் பற்றி சற்றும் கவலைப்படாமல்...
மருத்துவக் காப்பீட்டினை விரிவுபடுத்த வேண்டும்

மருத்துவர்கள், செவிலியர், பத்திரிகையாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோரைப் போல் போக்குவரத்துத் தொழிலாளர்களையும் முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும். அப்படி அறிவிக்கப்பட்டால்தான் முன்களப் பணியாளர்களுக்கு கிடைக்கக்கூடிய உரிமைகள் மற்றும் சலுகைகள் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கும் கிடைக்கும். மேலும், மே 31ஆம் தேதி உடன் காலாவதியாக இருக்கும் மருத்துவக் காப்பீட்டினை மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்க வேண்டும். ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கும் மருத்துவக் காப்பீட்டினை விரிவுபடுத்த வேண்டும்.

மருத்துவக் காப்பீட்டினை விரிவுபடுத்த வேண்டும்

பணி ஓய்வு மற்றும் விருப்பப் பணி ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த ஊழியர்களின் ஓய்வுகாலப் பயன்களை உடனடியாக வழங்க வேண்டும்.

ஒழுங்கு நடவடிக்கை, நீதிமன்ற வழக்கு போன்ற காரணங்களினால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணப் பலன்களை உடனடியாக வழங்கவேண்டும் என போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. அவர்களின் கோரிக்கையை ஏற்று முன்களப் பணியாளர்களாக அறிவிப்பது உட்பட அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலித்து அதற்கான ஆணையினை முதலமைச்சர் வெளியிட வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details