தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையிலிருந்து தீபாவளிக்கு இயக்கப்படும் பேருந்து விவரம்...!

சென்னை: தீபாவளியை முன்னிட்டு சென்னையிலிருந்து வெளியூர் செல்வதற்கான சிறப்பு பேருந்துகள் புறப்படும் இடம் குறித்த விவரங்களை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

transport-minister-gives-details-on-special-buses-operated-for-diwali

By

Published : Sep 19, 2019, 4:50 PM IST

சென்னை தலைமை செயலகத்திலுள்ள நாமக்கள் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற தீபாவளி சிறப்பு பேருந்து இயக்கம் குறித்த போக்குவரத்து மண்டல அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுடன் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக் கூட்டத்தில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைப்பது, போக்குவரத்து நெரிசலின்றி பண்டிகை காலங்களில் பேருந்துகள் இயக்குவது மற்றும் முன்பதிவு உள்ளிட்ட அம்சங்கள் குறித்த கருத்து கேட்கபட்டது.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், ”இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு மாதாவரம்,கே.கே.நகர், தாம்பரம் சானிடோரியம்,பூவிருந்தவல்லி, ஊரப்பாக்கம் என ஐந்து இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும். கோயம்பேட்டிலிருந்து வெளியூர்களுக்குச் செல்லும் பேருந்துகள் வழக்கம்போல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

எம்.ஆர்.விஜய பாஸ்கர் பேட்டி

குறிப்பாக, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், விழுப்புரம், பண்ருட்டி, நெய்வேலி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம் மற்றும் பெங்களூருக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்தே புறப்படும்” என்றார்.

மேலும் தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து இயக்கப்பட இருக்கிற பேருந்துகள் விவரம் பின்வருமாறு,

  • செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்துக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் அண்ணாநகர் மேற்கில் உள்ள மாநகர பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும்.
  • கிழக்கு கடற்கரை சாலை (ஈசிஆர்) வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் வரை செல்லும் பேருந்துகள் சைதாப்பேட்டை மாநகர போக்குவரத்துக் பணிமனை (சின்னமலை) எதிரில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து இயக்கப்படும்.
  • திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் அனைத்து பேருந்துகளும் தாம்பரம் சானிடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.
  • ஆற்காடு, ஆரணி, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் ஓசூர் போன்ற ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் அனைத்தும் பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும்
  • சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலைய கட்டுமான பணி நடைபெறுவதால் அருகில் உள்ள ஊரப்பாக்கத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்பட ஆலோசிக்கப்படுவதாக தெரிவித்தார்.

கடந்த மூன்றாண்டு போல இந்தாண்டும் அதிக பேருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மேலும் ஆயுத பூஜை உள்ளிட்ட விடுமுறை காலங்களிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாகவும் ஆம்னி பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details