மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே. 23ஆம் தேதி நடக்க உள்ளது. இந்த தேர்தலில் புதியதாக விவிபேட் எனப்படும் வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு இயந்திரம் பயன்படுத்தப்பட்டன. ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு 5 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகளை விவிபேட் இயந்திரங்களில் பதிவான வாக்குகளோடு சரிபார்க்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிண்டியில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி! - கிண்டி
சென்னை: வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் மற்றும் விவிபேட் வாக்குகள் ஆகியவற்றை எண்ணுவது குறித்து தேர்தல் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, கிண்டியில் இன்று பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும் 44 வாக்குச்சாவடிகளில் ஏற்பட்ட குளறுபடிகளால் விவிபேட் ஒப்புகை சீட்டுகளை மட்டும் எண்ண வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் இந்த முறை விவிபேட் வாக்குகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. எனவே வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட உள்ள தேர்தல் அலுவலர்களுக்கும், பணியாளர்களுக்கும் வாக்கு எண்ணிக்கை மற்றும் தேவையான முன்னேற்பாடு குறித்து கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் பயிற்சி இன்று தொடங்கியது. இதில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் மற்றும் விவிபேட் வாக்குகள் ஆகியவற்றை கணக்கிடுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர்கள் சந்தீப் சக்சேனா, உமேஷ் சின்ஹா, இந்திய தேர்தல் ஆணைய இயக்குனர் நிகில் குமார், தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு, கேரள தலைமை தேர்தல் அலுவலர் டீக்காராம் மீனா, மாவட்ட தேர்தல் அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.