தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வடமாநிலத் தொழிலாளர்களை திருப்பி அனுப்ப காட்பாடியிலிருந்து புறப்பட்ட முதல் சிறப்பு ரயில்!

திருவண்ணாமலை : வடமாநிலத் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்குத் திருப்பி அனுப்பும் ஷ்ராமிக் சிறப்பு ரயில், தமிழ்நாட்டில் இருந்து முதல் முறையாக, காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது.

By

Published : May 7, 2020, 12:10 PM IST

காட்பாடியிலிருந்து புறப்பட்ட ஷ்ராமிக் சிறப்பு ரயில்
காட்பாடியிலிருந்து புறப்பட்ட ஷ்ராமிக் சிறப்பு ரயில்

கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்க கடந்த மார்ச் 25ஆம் தேதி தொடங்கி நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் எதிரொலியாக மாநிலம் விட்டு மாநிலம் சென்று வேலை செய்து வந்த ஏராளமான பிற மாநில கூலித் தொழிலாளர்கள், வேலை இழந்து, உணவின்றி, தங்க இடமின்றி தவித்து வருகின்றனர்.

மாநிலம் தாண்டி வந்து வேலை செய்து வந்த தொழிலாளர்களின் இந்த நிலை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பிற மாநிலத் தொழிலாளர்கள், அரசு, தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர்.

தொடர்ந்து இவர்களுக்கு ஆதரவுக் குரல்களும் பெருகி வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊரடங்கால் நாடு முழுவதும் சிக்கியுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மத யாத்திரைக்கு சென்றவர்கள், மாணவர்களை சொந்த மாநிலங்களுக்கு திரும்பி அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது.

காட்பாடியிலிருந்து புறப்பட்ட ஷ்ராமிக் சிறப்பு ரயில்

இதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் வேலைக்காக சென்று சிக்கித் தவிக்கும் பிற மாநில கூலித் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல ஷ்ராமிக் எனப்படும் சிறப்பு ரயில் சேவையை இந்திய ரயில்வே அறிவித்தது.

காட்பாடியிலிருந்து புறப்பட்ட ஷ்ராமிக் சிறப்பு ரயில்

இந்த சிறப்பு ரயில் மூலம் பல்வேறு மாநில அரசுகளும் அந்தந்த மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் சிக்கி இருப்பவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்புவதற்கான முதல் சிறப்பு ரயில், காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து நேற்று இரவு 10.50 மணிக்கு புறப்பட்டதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்த ரயில் தமிழ்நாட்டின் காட்பாடியிலிருந்து, ஜார்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் உள்ள ஹட்டியா ரயில் நிலையம் வரை செல்கிறது.

இதையும் படிங்க :டாஸ்மாக் திறப்பு: காவல் துறை தலைவர் சுற்றறிக்கை

ABOUT THE AUTHOR

...view details