தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 20, 2020, 9:02 PM IST

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்...

9 மணி செய்திச் சுருக்கம்
9 மணி செய்திச் சுருக்கம்

'கமல், ரஜினியை சமாளிக்க திமுகவிற்கு தெம்பு உள்ளது' - கே.என்.நேரு

சென்னை: கடந்த காலங்களில் மும்முனை போட்டி ஏற்பட்டபோது திமுகவிற்கு சாதகமாக இருந்தது, அப்படியே இப்பொழுதும் இருக்கும் என திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தெரிவித்தார்.

டெல்லியில் உயிரிழந்த விவசாயிகளுக்கு வீரவணக்கம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

கோவை: மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டத்தை கண்டித்து டெல்லியில் போராடி உயிரிழந்த விவசாயிகளுக்கு தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

பழங்குடி மக்களுடன் இணைந்து நடனமாடிய அண்ணாமலை

கோவை: பாஜகவின் கோவை மாநகர மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் பழங்குடியின மக்களுடன் இணைந்து பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை உற்சாகமாக நடனமாடினார்.

இது இல்லைன்னா சபரிமலை ஐயப்பனை தரிசிக்க முடியாது?

திருவனந்தபுரம்: கரோனா தொற்று இல்லை என அளிக்கப்பட்ட சான்றிதழ்களைக் காட்டும் பக்தர்களே சபரிமலை ஆலயத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என கேரள தேவஸம் போர்டு தெரிவித்துள்ளது.

தெரு நாய்கள் மீது பரிவு: 6 ஆண்டுகளாக உணவளித்துவரும் பெண்மணி

நாய்கள் மீது பாசம் கொண்ட பத்மாவதி எனும் பெண்மணி, கடந்த ஆறு ஆண்டுகளாக தினமும் 80-க்கும் அதிகமான தெரு நாய்களுக்கு உணவளித்து வருகிறார்.

கேரளத்தில் மக்களை இன ரீதியாக பிரிப்பதா? பினராயி விஜயனுக்கு காங்கிரஸ் கண்டனம்!

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மக்களை இன ரீதியாக பிரிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள மாநில எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா காங்கிரஸின் தோல்விக்கான காரணம் குறித்தும் விளக்கினார்.

நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது - 2021 ஏப்ரல் மாதம் தேர்தல் அறிவிப்பு

காத்மாண்டு: நேபாள நாடாளுமன்றத்தைக் கலைக்க அந்நாட்டின் குடியரசுத் தலைவர் பித்யா தேவி பண்டாரி ஒப்புதல் அளித்துள்ளார்.

மெஸ்ஸியை பாராட்டிய பீலே!

தனது சாதனையை முறியடித்த பார்சிலோனா எஃப்சி அணியின் கேப்டன் மெஸ்ஸியை, கால்பந்து ஜாம்பவான் பீலே பாராட்டி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: ஸ்மித்தை நெருங்கிய கோலி, சறுக்கிய புஜாரா, ரஹானே!

ஐசிசி இன்று (டிசம்பர் 20) வெளியிட்ட டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 888 புள்ளிகளுடன் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் நீடித்து வருகிறார்.

கோல்டன் க்ளோப் விருது நிகழ்ச்சியில் திரையிட 'சூரரைப் போற்று' தேர்வு

கோல்டன் க்ளோப் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்ற பிரிவில், சூர்யா நடிப்பில் வெளியான "சூரரைப் போற்று" படம் திரையிடவுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details