தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 9 AM

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கத்தினைக் காணலாம்.

top-10-news-at-9-am
top-10-news-at-9-am

By

Published : Aug 5, 2021, 9:20 AM IST

1.40 வருட தவம்: ஒலிம்பிக் ஹாக்கியில் வெண்கலம் வென்றது இந்தியா

ஆண்கள் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெண்கலம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

2.இந்தியர்களின் நினைவில் இந்த வரலாறு பொறிக்கப்படும் - இந்திய ஹாக்கி அணிக்கு பிரதமர் வாழ்த்து

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

3.உங்கள் இல்லம் நாடி வருகிறது 'மக்களை தேடி மருத்துவம்' - ஸ்டாலின் தொடங்கிவைப்பு

பொதுமக்கள் எளிதில் மருத்துவச் சேவைகளைப் பெற மக்களை தேடி மருத்துவம் என்ற மகத்தான திட்டத்தை கிருஷ்ணகிரியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 5) தொடங்கிவைக்கிறார்.

4.மீன் சந்தைகளில் மக்கள் கூட்டம் - மாநகராட்சி நடவடிக்கை

மீன் சந்தைகளில் மக்கள் கூட்டம் கூடுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

5.பெண்களுக்கு பெயின்டர் பயிற்சி அளிக்கும் பிரபல நிறுவனம்

பிரபல நிப்பான் பெயின்ட் நிறுவனம், மெட்ராஸ் கிழக்கு ரோட்டரி குழுவுடன் இணைந்து பின்தங்கிய, ஊரகப் பகுதியைச் சேர்ந்த ஆயிரம் பெண்களுக்கு பெயின்டிங் பயிற்சி அளிக்கவுள்ளது.

6.மாநகராட்சி சார்பில் கரோனா விழிப்புணர்வுப் போட்டிகள்

பொதுமக்களுக்கு கரோனா தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநகராட்சி சார்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

7.1000 ஆண்டுகள் பழமையான வேட்டை நாய்க்கு வைத்த நடுகல் கண்டெடுப்பு

தானிப்பாடி அருகே உள்ள வேளூரில் வேட்டை நாய்க்கு வைத்த நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த இது தஞ்சை பெரிய கோயில் ஓவியத்தில் உள்ள நாயின் உருவத்துடன் ஒத்துள்ளது கவனிக்கப்பட வேண்டிய அம்சமாகும்.

8.நடமாடும் வாகனம் மூலம் செலுத்தப்பட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள்

நடமாடும் தடுப்பூசி செலுத்தும் வாகனம் மூலம் கடந்த ஜூன் 29ஆம் தேதிமுதல் நேற்று (ஆக 4) வரை 3,087 கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.


9.HBD ரித்விகா: தனித்துவ நடிப்பால் கோலிவுட்டில் கவனம் ஈர்த்த 'மெட்ராஸ்'காரி!

கபாலியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் திரையில் தோன்றிய ரித்விகா, பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்த 'ஒருநாள் கூத்து' படத்திலும் தன் தனித்துவமான கதாபாத்திரத்தின் மூலம் கவனம் ஈர்த்தார்.

10. டோக்கியோ ஒலிம்பிக்: வினேஷ் போகத் காலிறுதிக்குத் தகுதி

ஒலிம்பிக் தொடரின் 14ஆம் நாளான இன்று மகளிருக்கான மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகத் காலிறுதிக்குத் தகுதிபெற்றுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details