தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 AM

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்.

Top 10 news @ 9 AM
Top 10 news @ 9 AM

By

Published : Jul 12, 2020, 9:05 AM IST

அமிதாப் பச்சனுக்கு கரோனா, மருத்துவமனையில் அனுமதி

மும்பை: நடிகர் அமிதாப் பச்சன் கரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

சித்த மருத்துவத்தின் மீது சந்தேகப் பார்வை ஏன்? - விளக்கமளித்த அமைச்சர் பாண்டியராஜன்

சென்னை: சீனாவில் இருக்கும் நடைமுறை போல் இந்தியாவில் ஒருங்கிணைந்த மருத்துவப் படிப்பு இல்லாததே, சித்த மருத்துவத்தின் மீதான சந்தேகப் பார்வைக்கு காரணம் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

'உண்மைக்கு ஆதரவாகப் போராடாத பிரதமர்' - மோடியைச் சாடிய ராகுல்

டெல்லி: மத்தியப் பிரதேசத்தில் தொடங்கப்பட்டுள்ள ரேவா அல்ட்ரா மெகா சோலார் திட்டம் ஆசியாவில் மிகப்பெரியது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியதைக் குறிப்பிட்டு, உண்மைக்கு ஆதரவாக போராடுவதில் நம்பிக்கை இல்லாதவர் மோடி என காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

கரோனா நெருக்கடியைத் தொடர்ந்து இந்தியா எதிர்கொள்ளவிருக்கும் சமூகப் பிரச்னை 'வேலைவாய்ப்பின்மை'

ஹைதராபாத்: 2008ஆம் ஆண்டில் ஏற்பட்ட வேலைவாய்ப்பின்மை நெருக்கடியை விட மோசமான நிலை கரோனாவுக்குப் பிறகு உருவாகவுள்ளதாக பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD - Organisation for Economic Co-operation and Development) தகவல் தெரிவித்துள்ளது.

திருமாவளவன் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கடிதம்!

சென்னை: வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி தண்டிக்கப்பட்டுள்ள கைதிகளை மன்னித்து விடுவிக்கக் கூடாது என எம்.பி. திருமாவளவன் உள்துறை அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்.

ராஜஸ்தான் அரசியலில் என்ன நடக்கிறது?; விசாரணை வளையத்துக்குள் பாஜக!

ஹைதராபாத்: ராஜஸ்தானில் மீண்டும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், அதுகுறித்த சிறு பார்வை...

மாறும் இந்தியர்களின் விருப்பம் - தியேட்டர்களின் எதிர்காலம் என்னவாகும்?

டெல்லி: கரோனா ஊரடங்கு காலத்தில் நான்கில் மூன்று இந்தியர்கள் திரையரங்கிற்குப் பதிலாக ஓடிடி எனப்படும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களிலேயே திரைப்படங்களைப் பார்க்க விரும்புவதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கரோனா பரவல் அதிகரிப்பு: பெங்களூருவில் ஏழு நாட்கள் முழு ஊரடங்கு!

பெங்களூரு: கரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக கர்நாடக தலைநகர் பெங்களூருவில் ஜூலை 14ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

'அவர் என் தந்தையானது எனது வரம்' - நா. முத்துக்குமாரின் மகன் கவிதை!

சென்னை: பாடலாசிரியர், கவிஞர், எழுத்தாளர், நாவலாசிரியர், வசனகர்தா என பல முகங்களை கொண்ட மறைந்த கவிஞர் நா.முத்துக்குமாரின் பிறந்த தினம் இன்று (ஜூலை12). அவரின் பிறந்த தினத்தில் அவரின் மகன் ஆதவன், “என் தந்தை” என்ற தலைப்பில் எழுதியுள்ள கவிதை.

'கங்குலியால் மட்டுமே தோனி கோப்பையை வென்றார்' - கம்பீர்

டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக தோனி வலம் வந்ததற்கு, முன்னாள் கேப்டன் கங்குலி தான் காரணம் என முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details