தமிழ்நாடு

tamil nadu

காலை 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7 AM

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம்.

By

Published : Feb 6, 2021, 7:02 AM IST

Published : Feb 6, 2021, 7:02 AM IST

காலை 7 மணி செய்திச் சுருக்கம்
காலை 7 மணி செய்திச் சுருக்கம்

1 உங்கள் கதையைச் சொல்லுங்கள், 10 ரூபாயைப் பெறுங்கள்! புனே மக்களின் கவனத்தை ஈர்க்கும் இளைஞர்

பிம்ப்ரி நகரில் பதாகையுடன் சுற்றும் இவர் அனைவரையும் கவர என்ன காரணம்? "உங்க கதையைச் சொன்னா உங்களுக்கு 10 ரூபாய் தர்றேன்" என்கிறது அவர் ஏந்தியுள்ள பதாகை. இவர் பெயர் ராஜ் தக்வார் கணினி பொறியியலாளரான இவர், மன அழுத்தத்தின்பால் ஏற்படும் சிக்கல்களைப் புரிந்துகொண்டு, மன அழுத்தத்தைக் குறைக்கவும் பாதிக்கப்பட்டோருக்கு உதவவும் முடிவுசெய்தார். ஏன் இதைச் செய்கிறார் என்பது குறித்து இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

2 எந்த மதமும் தான் பெரியது என்று கூறவில்லை - மோகன் சி லாசரஸ் வழக்கில் நீதிமன்றம் கருத்து

தங்கள் மதம் பெரியது எனக் கூறி, மாற்று மதத்தின் மீது விஷம் கக்குவது, வெறுப்பை உமிழ்வது என்பது சம்பந்தப்பட்ட மதத்தின் நோக்கமோ, மத நம்பிக்கைகளின் நோக்கமோ அல்ல என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

3 கூட்டுறவுக் கடன் தள்ளுபடி குறித்து விவசாயிகள் என்ன நினைக்கிறார்கள்?

தமிழ்நாடு முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்த கூட்டுறவுக் கடன் தள்ளுபடி குறித்து திருவாரூர் விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

4 விவசாயிகள் போராட்டம்; கூகுள் உதவியை நாடும் போலீஸ்!

டெல்லி: விவசாயிகள் போராட்டத்தில் நடந்த வன்முறை தொடர்பாக டெல்லி போலீசார் கூகுளின் உதவியை நாடுகின்றனர்.

5 தங்கம் விலை ரூ. 224 சரிவு!

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு (8 கிராம்) 224 ரூபாய் சரிந்தும், கிலோ வெள்ளியின் விலை 400 ரூபாய் உயர்ந்தும் விற்பனையாகிறது.

6 கிரண் பேடிக்கு எதிராக நடந்த போராட்டம்: முடித்து வைத்த முதலமைச்சர்!

ஆளும் அரசுக்கு இடையூறாகச் செயல்படும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியைத் திரும்பப்பெற வலியுறுத்தி காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் நடத்திய உண்ணாவிரதப்போராட்டத்தை முதலமைச்சர் நாராயணசாமி பழச்சாறு வழங்கி முடித்து வைத்தார்.

7 நபிகள் நாயகம் குறித்து இழிவு பேச்சு - பாஜகவினர் இஸ்லாமியக் கட்சிகள் இடையே கைகலப்பு!

பிரதமர் மோடி குறித்து இஸ்லாமியக் கட்சிகள் பேசியதற்கு, பாஜக ஆர்ப்பாட்டத்தில் எதிர்வினையாக நபிகள் நாயகம் குறித்து இழிவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட கைகலப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

8 ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீடு தேடிவரும் பழனி பஞ்சாமிர்தம்!

திண்டுக்கல்: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் பிரசாதமான பஞ்சாமிர்தத்தை, பக்தர்களின் இல்லத்திற்கே கொண்டு சென்று வழங்க அனுமதியளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

9 மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிகள் குறித்து ஆய்வு!

சென்னை: மெட்ரோ ரயில் முதற்கட்ட விரிவாக்கப் பணிகளை மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய் அலுவலர்களுடன் நேற்று (பிப். 5) ஆய்வுசெய்தார்.

10 தேனி அருகே இருவேறு சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு!

தேனி: தேனி அருகே நடைபெற்ற இருவேறு சாலை விபத்தில், கணவர் கண்முன்னே மனைவியும், தாயின் எதிரே மகனும் என இருவர் உயிரிழந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details