தமிழ்நாடு

tamil nadu

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1PM

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம் இதோ...

By

Published : Jun 30, 2020, 1:22 PM IST

Published : Jun 30, 2020, 1:22 PM IST

top-10-news-at-1pm
top-10-news-at-1pm

தூத்துக்குடி எஸ்.பி.யாக விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமார் நியமனம்

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சாத்தான்குளம் தந்தை-மகன் உடற்கூறாய்வு அறிக்கை சமர்ப்பிப்பு!

மதுரை: சாத்தான்குளத்தில் காவலர்களால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் மரணித்த தந்தை- மகனின் உடற்கூறாய்வு அறிக்கை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் சமர்ப்பிக்கப்பட்டது.

சாத்தான்குளம் இரட்டை மரணம்: காவலரிடம் அச்சுறுத்தலை எதிர்கொண்ட நீதித்துறை நடுவர்!

தூத்துக்குடி: சாத்தான்குளம் காவல்நிலைய காவலர்களால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை-மகன் அடுத்தடுத்து உயிரிழந்தது தொடர்பாக விசாரிக்கச் சென்ற நீதித்துறை நடுவரை, ஒருமையில் பேசி மிரட்டல்விடுத்த காவலர் மீது நீதிமன்ற அவமதிப்பு, குற்ற நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு மீறல்: ரூ.16 கோடியைத் தாண்டியது அபராதம்

சென்னை: அரசு பிறப்பித்த ஊரடங்கு உத்தரவை மீறியதாக சென்னையில் தற்போதுவரை ஏழு லட்சத்து 70 ஆயிரத்து 299 பேர் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு 16 கோடியே 19 லட்சத்து 27 ஆயிரத்து 405 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

காவலர்கள் தகாத சொற்களால் திட்டியதாக விசிக மாநில நிர்வாகி தீக்குளிக்க முயற்சி

திருவாரூர்: காவல் துறையினர் தன்னிடம் தகாத வார்த்தைகளில் பேசியதாகக் கூறி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகி தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

போதிய பயணிகள் இல்லாமல் இன்று 10 விமானங்கள் ரத்து

சென்னை: உள்நாட்டு முனையத்தில் போதிய பயணிகள் இல்லாமல் இன்று மட்டும் 10 விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

தாஜ் ஓட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மும்பை தாஜ் ஓட்டலுக்கு பாகிஸ்தானிலிருந்து வெடிகுண்டு மிரட்டல்விடுக்கப்பட்டுள்ளது.

'இந்திய விவரங்களைப் பகிர்ந்ததில்லை; பகிரப்போவதுமில்லை' - செயல்பட அனுமதி கோரும் டிக்டாக்!

டெல்லி: டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகள் இந்தியாவில் கூகுள், ஆப்பிள் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் இந்தத் தடை குறித்து டிக்டாக்கின் இந்திய தலைமை விளக்கமளித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் நிலநடுக்கம்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் தோடா, கத்ரா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் முறையே 4.4, 4.0 ஆக பதிவாகியுள்ளது.

ஜம்மு - காஷ்மீரில் சுட்டுவீழ்த்தப்பட்ட 2 பயங்கரவாதிகள்!

ஜம்மு காஷ்மீர்: அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details