தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதியம் 1 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 1 PM

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

By

Published : Aug 23, 2021, 1:04 PM IST

1.எனக்கு எல்லாமுமே கருணாநிதிதான் - கண்கலங்கிய துரைமுருகன்

தன் தலைவர் அவர்தான்; தன் வழிகாட்டி அவர்; தனக்கு எல்லாமுமாக இருந்தவர் கருணாநிதி எனக் கண்ணீர் மல்க குறிப்பிட்டார் துரைமுருகன்.

2.எம்ஜிஆரிடத்தில் அன்பும், பற்றும் கொண்டவர் துரைமுருகன் - ஓபிஎஸ்

'அனைத்து ஆற்றல்களும் கொண்ட துரைமுருகன் 50 ஆண்டுகளாக சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளவர். அவருக்கு அதிமுகவின் இதயம் கனிந்த வாழ்த்துகள்' என எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

3.சிறார்கள் கவனம் - அக்டோபரில் மூன்றாம் அலை அபாயம்?

இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் கரோனா மூன்றாம் அலை உச்சம் பெறலாம் என தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் எச்சரித்துள்ளது.

4.100 சதவீத இட ஒதுக்கீடு - அமைச்சர் மா. சுப்பிரமணியன்

அனைத்துத் துறைகளிலும் 100 விழுக்காடு இட ஒதுக்கீடு என்ற நிலையை அடைவோம் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

5.அரசுக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறாதது ஏன்?

தமிழ்நாடு அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இன்று (ஆக. 23) மாணவர்கள் சேர்க்கை அறிவித்திருந்த நிலையில், மாணவர்கள் சேர்க்கை நடைபெறாததால் மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

6.கோடநாடு விவகாரம் - ஜெயக்குமாருக்கு தங்கம் தென்னரசு பதில்

கோடநாடு விவகாரம் ஜெயக்குமாருக்கு அவசர விஷயமாக இல்லாமல் இருக்கலாம் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
7.பேரவையின் பொன்விழா நாயகன் துரைமுருகன் - ஸ்டாலின் புகழாரம்

சட்டப்பேரவையில் 50 ஆண்டுகளை நிறைவுசெய்யும் துரைமுருகனைப் பாராட்டி சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

8.மதுரை ஆதீனம்: 293ஆவது பீடாதிபதியாக பொறுப்பேற்கும் ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமி

மதுரை ஆதீனத்தின் புதிய பீடாதிபதி ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகளுக்கு இன்று (ஆக.23) பட்டம் சூட்டப்படுகிறது.

9.அயோத்தி செல்லும் சாலைக்கு கல்யாண் சிங் பெயர்!

அயோத்தியில் உள்ள ராமர் பிறந்த இடமாகக் கருதப்படும் ராம ஜென்ம பூமியை நோக்கி செல்லும் சாலைக்கு உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங்கின் பெயர் சூட்டப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10.ரிலீஸுக்கு முன்பே ட்விட்டரில் பட்டைய கெளப்பிய வலிமை

வலிமை படத்தின் ஹேஷ் டாக் ட்விட்டரில் இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details