தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரு மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM - etv bharat

ஈடிவி பாரத்தின் ஒரு மணி செய்திச்சுருக்கம்.

ஒரு மணி செய்திச் சுருக்கம்
ஒரு மணி செய்திச் சுருக்கம்

By

Published : Jul 29, 2021, 1:00 PM IST

1 கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவு

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைய ஆரம்பித்திருப்பது பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2 சிறந்த முறையில் பாடம் நடத்தும் ஆசிரியருக்கு விருது...

கல்வித் தொலைக்காட்சியில் சிறந்த முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்களை தேர்வு செய்து விருதுகள் வழங்கப்படும் என பள்ளிகல்வித்துறை ஆணையர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

3 போதையில் அரசு பேருந்தை மறித்து இளைஞர் ரகளை

திண்டுக்கல்லில் குடிபோதையில் அரசுப் பேருந்தை வழிமறித்த இளைஞர் ரகளையில் ஈடுபட்டார்.

4 ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்

கரூர் காதப்பாறை முத்துநகர் பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை நேற்று (ஜூலை 28) முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

5 சட்ட விரோத கருக்கலைப்பு - போலி பெண் மருத்துவர் கைது

செங்கம் பகுதியில் சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்த போலி பெண் மருத்துவர் கைது செய்யப்பட்டார்.

6 நரேந்திர மோடி- ஆன்டணி பிளிங்கன் பேசியது என்ன?

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் புதன்கிழமை (ஜூலை 28) பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அப்போது, இந்தியா- அமெரிக்கா உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

7 கேரளாவில் வார இறுதிநாள்களில் பொதுமுடக்கம்!

அண்டை மாநிலமான கேரளத்தில் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என அம்மாநில அரசு வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

8 NEETஇல் ஓ.பி.சி. இட ஒதுக்கீடு - பிரதமருடன் அமைச்சர் பூபேந்திர் யாதவ் சந்திப்பு

நீட் தேர்வுக்கான அகில இந்திய கோட்டாவில் ஓ.பி.சி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை முறையாக வழங்க வேண்டும் என ஒன்றிய அமைச்சர் தலைமையிலான குழு கோரிக்கை வைத்துள்ளது.

9 கோவிட் லாக்டவுன்- இந்திய பெண்கள் ஊட்டச்சத்து பாதிப்பு!

கோவிட் பெருந்தொற்று பரவல், லாக்டவுன் காரணமாக இந்தியப் பெண்களுக்கு சரியான சரிவிகித உணவு கிடைக்கவில்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது.

10 இமாச்சலத்தில் நிலச்சரிவு - ஏழு பேர் உயிரிழப்பு

இமாச்சல் பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details