தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9PM

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்.

top-10-news-9-pm
top-10-news-9-pm

By

Published : Jul 16, 2020, 8:55 PM IST

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலுக்கு கரோனா

சென்னை: தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்த கரோனா பாதிப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 369ஆக அதிகரித்துள்ளது. மேலும், தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 236ஆக அதிகரித்துள்ளது.

சாத்தான்குளம் கொலை வழக்கு: காவலர்களுக்கு ஜூலை 30 வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட முத்துராஜைத் தவிர்த்து நான்கு காவல் துறையினரையும், ஜூலை 30ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

'அரசுக் கலைக் கல்லூரிகளில் சேர்வதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்' - அமைச்சர் கே.பி. அன்பழகன்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்வதற்கு வரும் 20ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் அறிவித்துள்ளார்.

ரேபிட் கருவிகள் வாங்குவது தொடர்பான வழக்கில் ஐசிஎம்ஆர் பதிலளிக்க உத்தரவு!

மதுரை: நோய் எதிர்ப்புத் திறனைப் பரிசோதிக்க அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து ரேபிட் கருவிகளை வாங்க உத்தரவிடக் கோரிய வழக்கில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐசிஎம்ஆர்) பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

முடிவை திரும்பப்பெற்ற தேர்தல் ஆணையம்: 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் மூலம் வாக்களிக்க முடியாது!

டெல்லி: 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், நடைமுறை சிக்கல்கள் காரணம் காட்டப்பட்டு அந்த முடிவு திரும்பப்பெறப்பட்டுள்ளது.

டிக்டாக் தடை: இந்தியாவைப் போன்றே அமெரிக்காவிலும் வலுக்கும் குரல்!

இந்தியாவைப் பின்பற்றி அமெரிக்காவிலும் டிக் டாக்கை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. அமெரிக்காவில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பிற்கு இதுகுறித்து கடிதமும் எழுதியுள்ளனர்.

சமந்தாவின் சவாலை ஏற்ற ராஷ்மிகா!

நடிகை சமந்தா விடுத்த மரக்கன்று நடும் சவாலை ஏற்று ராஷ்மிகா தனது தோட்டத்தில் 3 மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

5 மாற்று வீரர்களை அனுமதிக்கும் விதி 2021 வரை நீட்டிப்பு - ஃபிஃபா

கரோனா காரணமாக கால்பந்து தொடர்கள் முடிவடைவதற்கு கால தாமதம் ஏற்பட்டுள்ளதால், 5 மாற்று வீரர்கள் அனுமதிக்கும் விதி 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என ஃபிஃபா அறிவித்துள்ளது.

இரண்டாவது பரிசோதனையிலும் பிரேசில் அதிபருக்கு கரோனா உறுதி

பிரேசிலியா: பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு இரண்டாவது பரிசோதனையிலும் கரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details