தமிழ்நாடு

tamil nadu

காலை 9 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 9 AM

By

Published : Aug 8, 2021, 9:40 AM IST

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

TOP 10 NEWS @ 9 AM
TOP 10 NEWS @ 9 AM

தங்க மகன் நீரஜ் சோப்ரா - கோடி ரூபாய் பரிசளித்த சிஎஸ்கே!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு, சிஎஸ்கே அணி சார்பாக ஒரு கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி ட்விட்டர் கணக்கு தற்காலிக முடக்கம்!

ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கியுள்ளதையடுத்து, 24 மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் செயல்படும் என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TOKYO OLYMPICS: ஒலிம்பிக்கில் இந்திய தேசிய கீதம்... எத்தனை ஆண்டுகள் கனவு தெரியுமா...

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றதையடுத்து 13 ஆண்டுகளுக்குப் பின் ஒலிம்பிக் அரங்கில் இந்திய தேசிய கீதம் ஒலித்தது.

டோக்கியோ ஒலிம்பிக் 16ஆவது நாள்: தங்கத்துக்கு பின் இந்தியா எந்த இடத்தில்?

டோக்கியோ ஒலிம்பிக் 2020 ஆண்டு 16ஆம் நாள் போட்டிகளின் முடிவில், நீரஜ் சோப்ரா வென்ற தங்கம் உள்பட ஏழு பதக்கங்களுடன் இந்தியா 47ஆவது இடத்தில் உள்ளது.

உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவுப் பட்டியல் வெளியீடு

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்காக வரைவுப் பட்டியலை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர் ஆ.ராகுல்நாத், ஆட்சேபனை குறித்து வரும் 9ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஆடி அமாவாசை - மக்கள் கூட்டத்தைத் தவிர்க்கக் அறிவுறுத்தல்

கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஆடி அமாவாசையான இன்று(ஆகஸ்ட். 8) பொதுயிடங்களில் மக்கள் கூட்டத்தைத் தவிர்க்க வேண்டும் என்று சென்னை காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எத்தனை பேருக்கு தொலைப்பேசி வாயிலாக மருத்துவ ஆலோசனை?

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்து வீடு திரும்பியவர்களை, தொலைப்பேசி மூலம் தொடர்புகொண்டு கண்காணிக்கும் திட்டத்தின் மூலம், இதுவரை ஒரு லட்சத்து 29ஆயிரத்து 712 நபர்களைத் தொலைப்பேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டதாக என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

செல்போனை பிடுங்கியதால் ஆத்திரம்: ஒருவருக்கு அரிவாள் வெட்டு, மற்றொருவர் படுகாயம்

செல்போனை பிடுங்கியதால் நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டு சரமாரியாக தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'நீரஜின் திறமை கடவுள் கொடுத்த பரிசு' - முதல் பயிற்சியாளர்

டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் தங்கம் சோப்ரா தங்கம் வென்றுள்ளதையடுத்து, அவரின் திறமை கடவுள் கொடுத்த பரிசு என்று அவரது முதல் பயிற்சியாளர் ஈட்டி எரிதல் பயிற்சியாளர் காசிநாத் நாயக் தெரிவித்தார்.

'அந்தகன்' டப்பிங் பணியை தொடங்கிய வனிதா விஜயகுமார்!

பிரசாந்த் நடிக்கும் 'அந்தகன்' படத்தில் தனது டப்பிங் பணிகளை நடிகை வனிதா விஜயகுமார் தொடங்கியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details