தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காதல் துணையை கவர்ந்திழுக்கும் ராசிக்காரர்கள் யார்..!

Today Rasi Palan in Tamil: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் பலன்களைப் பார்க்கலாம்.

Today Rasi Palan in Tamil
இன்றைய ராசிபலன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 14, 2024, 7:01 AM IST

மேஷம்:துரித முடிவுகளை அந்த இடத்திலேயே எடுக்கும் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும் விஷயங்களில் முடிவெடுக்கும்போது, பிறரின் ஆலோசனைகளைக் கேட்பது நல்லது. அதிலும், நிதி தொடர்பான விஷயமாக இருந்தால் முடிவெடுப்பதற்கு முன் உரியவர்களிடம் ஆலோசனையைப் பெறலாம்.

ரிஷபம்:எளிதான, கவலையற்ற நாள் உங்கள் முன் இருக்கிறது. எந்தவொரு வருத்தமோ அல்லது கவலையோ இன்றைக்கு ஏற்படாது. எனினும், சக்திக்கு மீறி ஒரு நேரத்தில் பல விஷயங்களை நீங்கள் கையாள வேண்டியிருந்தாலும் பாராட்டைப் பெறாமல் போவதற்கும், மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உண்டு. நடைமுறைக்கு ஏற்றவாறு நடந்துக் கொள்ளுங்கள். விஷயங்களை மிகைப்படுத்த வேண்டாம். யதார்த்தமாகவும், நியாயமாகவும் இருக்க முயற்சிக்கவும்.

மிதுனம்:மதம் மற்றும் சமூக பிரச்னைகளைப் பற்றி சிந்திக்கவும், அவற்றைப் பற்றி குடும்ப உறுப்பினர்களுடன் விவாதிக்க நேரலாம். உங்கள் கருத்துக்களை அவர்களுக்கு தெளிவாகத் தெரியப்படுத்துங்கள். இதைத் தவிர, சட்டம், கல்வி, சமுதாய கடமைகள், கலாச்சாரம் போன்ற விஷயங்களில் கலந்துரையாடலாம்.

கடகம்:நிலுவையிலுள்ள பணிகளை செய்து முடிப்பதற்காக இன்னும் அதிகம் உழைக்க வேண்டும். சொந்த வாழ்க்கையைவிட தொழில் வாழ்க்கைக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டியிருக்கும். எனவே, உங்கள் நேரத்தின் பெரும்பகுதியை தொழிலே ஆக்கிரமித்துக்கொள்ளும். மாலையில் உங்கள் காதல் துணையோடு, மகிழ்ச்சியான தருணங்களைக் அனுபவிப்பீர்கள்.

சிம்மம்:கூட்டாளியை திருப்திப்படுத்த நீங்கள் மேற்கொள்ளாத முயற்சியே இல்லை என்று சொல்லலாம். எனவே, அவர் உங்களிடமிருந்து நழுவி செல்வதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு. காதல் துணையை கவர்ந்திழுக்க முடியும். பண பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்க வேண்டிய நாள் இது.

கன்னி:வாழ்க்கையில் திருப்பு முனை அவசியமானது என்பதை புரிந்து கொள்வது நல்லது. எதை செய்தாலும் அதை சிறப்பாகவே செய்வீர்கள். உங்கள் முன்னுரிமை பட்டியலில் பிரதான இடம் பிடிப்பது நிதி விஷயங்கள் மற்றும் உறவுகள் என்றாலும், அவற்றின் வரிசை மாற வாய்ப்புண்டு. ஆன்மீகத்திற்காக அதிக நேரம் செலவிடும் வாய்ப்பு உண்டு.

துலாம்:புதிய விஷயங்களைப் பற்றி அறிந்துக் கொள்ள முயல்வீர்கள். உற்சாகம் மற்றும் நேர்மறையான உணர்வால் நிறைந்த நாள் இது. நண்பர்களுடன் உரையாடுவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். எனவே, அவர்களுடன் நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையிடம் இருந்து பல நன்மைகள் தேடிவரும். நெருங்கிய உறவினரோடு, இன்றைய தினத்தை மகிழ்ச்சியுடன் செலவளிப்பீர்கள்.

விருச்சிகம்:உன்னுடைய விருப்பங்களை அழுத்தமாக, மோதல்போக்குடன் சொல்ல வேண்டியிருக்கலாம். இருந்தாலும், உங்களைப் பற்றிய அபிப்ராயத்தை அது தவறாக சித்தரிக்காமல் எச்சரிக்கையாக இருக்கவும். பெரிய அளவிலான திட்டங்களில் பிரச்னை ஏற்படாமல் கவனமாக இருக்க வேண்டும் என்ற தெளிவு அவசியம்.

தனுசு:அறிவுப்பூர்வமான வார்த்தைகளும், தீர்மானமாக ஒரு கதாநாயகன் போல் செயல்படுவதும் இன்றைய உங்கள் பாணியாக இருக்கும். பணியில் நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம், குறிப்பாக ஊதிய உயர்வோ, பதவி உயர்வோ கிடைக்கலாம். அக்கவுண்டண்ட்டுகளுக்கு நல்ல நாள், கடை வைத்திருப்பவர்களுக்கு இன்று வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.

மகரம்:காதல் உள்ளம் படைத்தவர், உங்கள் அன்புக்கு உரியவரை சொர்க்கத்திற்கே அழைத்துச் செல்பவர் நீங்கள். இருந்தாலும், கற்பனை உலகத்திலேயே வாழ்வது நல்லதல்ல. ஏனெனில், எல்லா இடங்களிலும் சிக்கல்கள் பின்தொடர்கின்றன. தொழிலதிபராக இருந்தால், போட்டியாளர்கள் உங்களுக்கு கடும் சவாலை ஏற்படுத்தலாம். ஆரோக்கியத்தில் உரிய கவனம் தேவை.

கும்பம்:நேரமே போதாது என சொல்வது போல் இன்று உங்களுக்கு நிறைய வேலைகள் காத்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, நிர்வாகப் பொறுப்பில் இருந்தால் உங்கள் பணிச்சுமை அதிகமாக இருக்கலாம். எனினும், விடாமுயற்சியும் அர்ப்பணிப்புடன் கூடிய செயல்பாடுகளும் உங்களை அடுத்தக் கட்டத்துக்கு அழைத்துச் செல்லும். எவ்வளவு கடினமான பணிகளை செய்தாலும், மாலையில் விருந்துக்கு செல்ல நேரம் ஒதுக்குவீர்கள். இன்று ஆற்றல் மிகுந்த நாள்.

மீனம்:பணத்தின் முக்கியத்துவம் தற்போது உங்களுக்குப் புரியும். இன்று முழுவதுமே, அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பீர்கள். செலவுகளைப் குறைத்து மதிப்பிடுவீர்கள். குடும்பத்தைப் பற்றியக் கவலை அதிகரிக்கும், அதேபோல் குடும்பத்தினரும் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள்.

ABOUT THE AUTHOR

...view details