தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவல்துறை அலுவலர்களை இட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை : தமிழ்நாட்டில் நான்கு காவல் துறை அலுவலர்களை இட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

காவல்துறை அலுவலர்களை இட மாற்றம்
காவல்துறை அலுவலர்களை இட மாற்றம்

By

Published : Sep 4, 2020, 12:52 PM IST

தமிழ்நாட்டில், நான்கு காவல்துறை அலுவலர்களை இட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், ராமநாதபுரம் எஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் உள்துறைச் செயலர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவில், "திருப்பூர் நகர தலைமையிட துணைக்கமிஷனர் செல்வகுமார், வேலுார் எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்ட எஸ்பி பர்வேஷ் குமார் சென்னை ரயில்வே எஸ்பியாகவும், சென்னை ரயில்வே எஸ்பி மகேஷ்வரன் சென்னை பூக்கடை காவல்துறை துணைக் கமிஷனராகவும், பூக்கடை துணைக் கமிஷனராக இருந்த கார்த்திக், ராமநாதபுரம் எஸ்பியாகவும் மாற்றப்பட்டுள்ளார். ராமநாதபுரம் எஸ்பியாக இருந்த வருண்குமார் காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பியாக இருந்த வருண்குமார் சாதி ரீதியாக செயல்படுவதாகவும், போலியாக வழக்குகள் பதிவு செய்து வருவதாகவும் தெரிவித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சட்டப்பேரவை உறுப்பினர் கருணாஸ் முதலமைச்சரிடம் புகார் அளித்துச் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அது மட்டுமில்லாமல் சமீபத்தில் ராமநாதபுரத்தில் நடைபெற்ற அருண் பிரகாஷ் கொலை வழக்கு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் எஸ்.பி வருண்குமார், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதே போல் பூக்கடை, முத்தியால்பேட்டையில் இரண்டு கோடி ரூபாய் ஹவாலா பணம் கொள்ளை விவகாரத்தில், கொள்ளையடித்த பயங்கரவாதி தவ்ஃபீக் நீண்ட நாள்களாக கைது செய்யப்படாமல் இருந்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், பூக்கடை துணை ஆணையராக இருந்த கார்த்திக், தற்போது ராமநாதபுரம் எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details