கடந்த 2011ஆம் ஆண்டு முதல் மீண்டும் நடைமுறையிலிருந்த வாக்காளர்கள் நேரடியாக வாக்களித்து மேயரை தேர்வு செய்யும் முறை, எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் மேயர்களை மக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுப்பது மாற்றப்படும் என எதிர்பார்த்த நிலையில், மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் மூலம் மேயர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தமிழ்நாடு அரசு அவசரச் சட்டம் பிறப்பித்து அரசாணை வெளியிட்டுள்ளது. அதேபோல் நகர்மன்ற தலைவர்களையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் தேர்வு செய்வார்கள் எனவும் தமிழ்நாடு அரசு அரசாணையில் அறிவித்துள்ளது. இந்த அவசரச் சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார்.