இதுதொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதலமைச்சரின் தலைமையில் கரோனா தொற்றைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும், தீவிர முனைப்புடன் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருகிறது. ஆயிரத்து 769 மருத்துவர்கள் உள்பட 14 ஆயிரத்து 814 மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் கூடுதலாகப் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
கரோனா சிகிச்சைக்கு உயர்தர மருந்துகள் கொள்முதல் செய்ய முதலமைச்சர் உத்தரவு
17:35 June 27
சென்னை: கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சையளிக்க விலை உயர்ந்த மருந்துகளைக் கொள்முதல் செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஏழை, எளிய மக்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோக்கில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் எவ்வித கட்டணமும் இல்லாமல் சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளன. தனியார் மருத்துவமனைகள் கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து வசூலிக்க வேண்டிய கட்டணத்தை நிர்ணயித்தும் முதலமைச்சர் ஆணைகள் பிறப்பித்துள்ளார். கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சையளிக்கும் நோக்கத்தோடு உயிர்காக்கும் விலை உயர்ந்த ஊசி மருந்துகளைத் தருவித்துப் பயன்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து தமிழ்நாடு மருத்துவப் பணிகள் சேவைக் கழகம் மூலம், டோசிலிசுமாப் (Tocilizumb) 1,200 குப்பிகள் (400 கிராம்), ரெம்டெசிவிர் (Remdesivir) 42 ஆயிரத்து 500 குப்பிகள் (100 gm), ஏனோக்சாபரின் (Enoxaparin) 1 லட்சம் குப்பிகள் (40 gm) ஊசி மருந்துகளை வாங்குவதற்குக் கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டு, இதுவரை 1,000 குப்பிகள், 1 ஆயிரத்து 100 குப்பிகள், 1 லட்சம் குப்பிகள் முறையே பெறப்பட்டுள்ளன.
மீதமுள்ள குப்பிகள் ஓரிரு நாள்களில் வந்தடையும். இந்த உயரிய உயிர்காக்கும் ஊசி மருந்துகள் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற உயர்தர உயரிய உயிர்காக்கும் மருந்துகளைக் கொள்முதல் செய்வதும், இம்மருந்துகள் மாவட்ட அளவில் இருப்பில் வைத்துப் பயன்படுத்துவதிலும், இந்தியளவில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மேலும் தேவையின் அடிப்படையில் இம்மருந்துகள் கூடுதலாகத் தருவிக்கப்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கரோனா பரிசோதனை இயந்திரம் பற்றாக்குறை - விருதுநகரில் கரோனாவை கட்டுப்படுத்துவதில் சிக்கல்