தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீட் தேர்வு குறித்து ஆராய குழு - தமிழ்நாடு அரசுக்கு உரிமை உள்ளது - கே.எஸ்.அழகிரி

நீட் தேர்வு குறித்து ஆராய குழு அமைக்க தமிழ்நாடு அரசுக்கு உரிமையில்லை என அதிகார மமதையில் பாஜக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

ks alagiri
ks alagiri

By

Published : Jul 3, 2021, 11:48 AM IST

சென்னை: சத்தியமூர்த்தி பவனில் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார்‌. அப்போது பேசிய அவர், "பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஜூலை 8 ஆம் தேதி முதல் பல்வேறு போராட்டங்களை நடத்த உள்ளோம். பெட்ரோல் நிலையத்திற்கு முன்பு கையெழுத்து இயக்கம் நடத்தப்படும்.

இரண்டாம் கட்டமாக, ஜூலை 12ஆம் தேதி சைக்கிள் பேரணி நடைபெறும். மூன்றாம் கட்டமாக காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15 ஆம் தேதி தடுப்பூசிகளை காலம் தாழ்த்தி வழங்குவதை கண்டித்து ஒன்றிய அரசுக்கு எதிராக போராட்டம் நடைபெறும்.

நீட் தேர்வு குறித்து குழு அமைக்க தமிழ்நாடு அரசுக்கு முழு உரிமை உள்ளத. அதன் அடிப்படையில் தான் ஏ.கே.ராஜன் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிகார மமதையில் அதற்கு எதிராக பாஜக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

அறிவு குறைவாக உள்ளவர்கள் மருத்துவர்கள் ஆகும் நிலை உள்ளதாக பாஜக கூறுகிறது. சமூக நீதி கொண்ட தமிழ்நாட்டில் இவ்வாறு அவர்கள் கூறுகிறார்கள். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இதனை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்" என்று கே.எஸ்.அழகிரி கூறினார்.

இதையும் படிங்க : ஒன்றியம் என்பதில் என்ன பிழை? - ட்விட்டரில் கேள்வி எழுப்பிய வைரமுத்து!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details