இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “திருநெல்வேலி மாவட்டம், நம்பியாறு நீர்த்தேக்கத்திலிருந்து, பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருநெல்வேலி மாவட்டம் நம்பியாறு நீர்த்தேக்கத்திலிருந்து, நம்பியாறு நீர் தேக்கத்தின் வலது மற்றும் இடது மதகுகளின் பிரதானக் கால்வாய்களின் கீழ் பாசனம் பெறும் நேரடி மற்றும் மறைமுகப் பாசனப் பகுதிகளுக்கு பிசான பருவ சாகுபடிக்கு வரும் 27ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை, நாள்தோறும் வினாடிக்கு 60 கன அடிக்கு மிகாமல், நீர் இருப்பு, நீர் வரத்தினைப் பொறுத்து, தேவைக்கேற்ப தண்ணீரை திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.
பாசனத்திற்காக நம்பியாறு நீர் தேக்கத்திலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவு!
சென்னை: நம்பியாறு நீர் தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
பாசனத்திற்காக நம்பியாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவு!
இதனால், திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை மற்றும் இராதாபுரம் வட்டங்களில் 1744.55 ஏக்கர் நேரடி மற்றும் மறைமுகப் பாசன நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க...'நீதியை நிலைநாட்ட மநீம தொடர்ந்து போராடும்' - கமல்ஹாசன் ட்வீட்