தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீட்டு வசதி வாரியத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் - துணை முதலமைச்சர் ஆலோசனை!

வீட்டு வசதி வாரியத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசணை மேற்கொண்டார்.

tn_che_03_ops_review_meeting
tn_che_03_ops_review_meeting

By

Published : Mar 10, 2020, 2:02 PM IST

Updated : Mar 10, 2020, 4:08 PM IST

வீடில்லா ஏழை மக்களுக்கு, 2023 ஆம் ஆண்டுக்குள் வீடுகள் வழங்கப்படும் என்ற திட்டத்தின் கீழ், தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. தற்போது வரை 6 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

விரைவில் புதிதாக 6 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளன. இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறையில் நிறைவேற்றப்பட்ட, செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆலோசணை மேற்கொண்டார்.

சென்னை தலைமை செயலகத்தில் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தும் துணை முதலமைச்சர்.

அப்போது வீட்டு வசதி வாரியம் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை விரைந்து செயல்படுத்துமாறு அலுவலர்களுக்கு ஆலோசணை வழங்கினார். ஆலோசணை கூட்டத்தில் வீட்டு வசதி, நகர்புற வளர்ச்சித் துறை அரசு முதன்மைச் செயலாளர் ராஜேஷ் லக்கானி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் கார்த்திகேயன் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:அதிமுக ராஜ்ய சபா வேட்பாளர்கள் துணை முதலமைச்சருடன் சந்திப்பு

Last Updated : Mar 10, 2020, 4:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details