2017இல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ. பன்னீர் செல்வம் உட்பட 11 அதிமுக எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கக் கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று (ஜூன் 16) விசாரணைக்கு வரவுள்ளது.
11 எம்.எல்.ஏ.க்கள் மீது புகார் அளித்த 6 பேருக்கு நோட்டீஸ்!
சென்னை: 11 எம்.எல்.ஏ.க்கள் மீது புகார் அளித்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆறு பேருக்கு 7 நாள்களுக்குள் பதிலளிக்க சட்டப்பேரவைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
TN Assembly secretary Srinivasan sent notice to the former 6 MLAs who filed complaints against the termination of 11 MLAs
இந்த நிலையில் 11 எம்.எல்.ஏ.க்கள் மீது புகார் அளித்த முன்னாள் எம்.எல்.ஏக்கள் ஆறு பேருக்கு 7 நாள்களுக்குள் பதிலளிக்க சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக புகார் அளித்த அப்போதைய எம்.எல்.ஏ.க்களான வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன், பார்த்திபன், எஸ்.ராஜா, முருகுமாறன் உள்ளிட்ட ஆறு பேருக்கு சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன், கடந்த ஜூன் 10ஆம் தேதி கடிதம் எழுதி, அனுப்பியுள்ளார்.