நடப்பு ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்குஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன்தொடங்குகியது.
சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூடி சட்டப்பேரவைக் கூட்டத்தை எத்தனை நாள்கள் நடத்தலாம் என்பது குறித்து முடிவு செய்து அறிவிக்கப்படும்.
கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்
மேலும், குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதான எதிர்க்கட்சியான திமுக கேள்வி எழுப்பவுள்ளதால், கூட்டத்தொடர் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், துரைமுருகன் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுக்குப் பிறகு இந்தாண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதால் இந்தப் பேரவைக் கூட்டம் பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: எழுந்தது யார்? விழுந்தது யார்?