தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 1, 2020, 5:45 PM IST

ETV Bharat / state

கரோனா அச்சம்: அனுமதியிருந்தும் இரு விழுக்காடு ஊழியர்களோடு இயங்கும் டைடல் பார்க்!

சென்னை: அரசு அனுமதி அளித்தும் அதிகமான ஊழியர்களின்றி டைடல் பூங்கா வெறிச்சோடி காணப்பட்டது.

டைடல்
டைடல்

தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்று வேகமாகப் பரவிவருகிறது. குறிப்பாக சென்னையில் கரோனாவின் ஆதிக்கம் அதிகமாகவுள்ளது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.

நான்காம் கட்ட ஊரடங்கு முடிந்து ஐந்தாம் கட்ட ஊரடங்கு தொடங்கியுள்ள நிலையில், அனைத்து மாவட்டங்களும் எட்டு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டன. இதில் கடைசி மண்டலமாக சென்னை இடம்பெற்றது. மற்ற மண்டலங்களில் கொடுக்கப்பட்ட தளர்வுகள் தற்போதுதான் சென்னையில் கொடுக்கப்பட்டன.

அனுமதியளிக்கப்பட்ட பிறகும் நிசப்தமாக இயங்கும் டைடல் பூங்கா

அதன் ஒரு பகுதியாக தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களுக்கு அனைத்தும் சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் 100 விழுக்காடு பணியாளர்களைக் கொண்டு இயக்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டது. இருப்பினும் 20 விழுக்காடு பணியாளர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய ஊக்குவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியது.

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட இடங்களில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் 20 சதவீத விழுக்காடு பணியாளர்களையும் அதிகபட்சமாக 40 பணியாளர்களைம் கொண்டு இயங்கலாம். அனைத்து தனியார் நிறுவனங்களும் 50 விழுக்காடு ஊழியர்களையும் கொண்டு இயங்கலாம் எனவும் அறிவுறுத்தியது.

சென்னை டைடல் தொழில்நுட்ப பூங்காவில் 100க்கும் மேற்பட்ட சிறிய நிறுவனங்கள் அமைந்துள்ளன. ஊரடங்கில் அனைத்து நிறுவன பணியாளர்களையும் வீட்டிலிருந்தபடியே பணியாற்ற அறிவுறுத்தியது. தற்போது அரசு நிறுவனங்களைத் திறக்கலாம் என அனுமதித்தும் 98 விழுக்காடு ஊழியர்கள் அலுவலகத்திற்கு வரவில்லை. மீதியுள்ள இரு விழுக்காடு பணியாளர்கள் மட்டும் கரோனா விதிகளுடன் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் டைடல் பூங்கா தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.

இதையும் படிங்க: ஊரடங்கு தளர்வு: விமான பயணச் சீட்டுகளின் கட்டணம் கிடுகிடு உயர்வு!

ABOUT THE AUTHOR

...view details