சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் கலசப்பாக்கம் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் சரவணன் பேசுகையில், திருவண்ணாமலை அரசு கலை கல்லூரிக்கு முன்னதாக கலைஞர் அரசு கலைக் கல்லூரி என பெயர் இருந்தது. தற்போது அந்தப் பெயர் பின்பற்றப்படாமல் உள்ளது என்றார்.
கலைஞர் அரசு கலைக்கல்லூரி
சரவணன் பேச்சுக்கு பின் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறுகையில், கலைஞர் அரசு கலைக் கல்லூரி என திருவண்ணாமலையில் உள்ள அரசு கலைக் கல்லூரிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஒப்புதலுடன் 'கலைஞர்' பெயர் மாற்றப்படும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: சட்டப்பேரவை: முதலமைச்சர் ஸ்டாலின் உரை